பப்பாளி பழத்தால் பாதிப்பு கூட வருமா? ஆபத்தான எதிர்விளைவுகள் இதோ!!

பப்பாளி அதன் அற்புதமான ஆரோக்கிய நன்மைகளுக்கு பெயர் பெற்றது. இந்த குறைந்த கலோரி உள்ள பழம் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இருப்பினும், அதிக அளவில் இதை உட்கொண்டால் இது சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 26, 2021, 04:47 PM IST
  • பப்பாளி அதன் அற்புதமான ஆரோக்கிய நன்மைகளுக்கு பெயர் பெற்றது.
  • அதிக அளவில் இதை உட்கொண்டால் இது சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகிறது.
  • பப்பாளி சாப்பிடுவதால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
பப்பாளி பழத்தால் பாதிப்பு கூட வருமா? ஆபத்தான எதிர்விளைவுகள் இதோ!!  title=

Health Tips: பப்பாளி அதன் அற்புதமான ஆரோக்கிய நன்மைகளுக்கு பெயர் பெற்றது. இந்த குறைந்த கலோரி உள்ள பழம் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இது பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளுக்கு பிரபலமானது. மேலும் இது செரிமானத்தையும் ஊக்குவிக்கிறது. பப்பாளி பீட்டா கரோட்டின் போன்ற ஆண்டிஆக்சிடெண்ட் கரோட்டினாய்டுகளின் நல்ல மூலமாகக் கருதப்படுகிறது, இது நம் பார்வை சக்திக்கும் மிகவும் பயனளிக்கிறது. இது தவிர, பப்பாளி இலைகள் டெங்கு காய்ச்சலுக்கும் எதிராக செயல்படுகின்றன. நார்ச்சத்து அதிகம் உள்ள பப்பாளி மலச்சிக்கல் போன்ற சூழ்நிலைகளிலும் பயனளிக்கும். இருப்பினும், அதிக அளவில் இதை உட்கொண்டால் இது சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகிறது.

செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்
பப்பாளியில் (Papaya) அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு இது மிகவும் நல்லது. ஆனால், பப்பாளி பழத்தை உட்கொண்டால், அது வயிற்றின் ஆரோக்கியத்தைக் கெடுக்கும். பப்பாளியில் உள்ள அதிக நார்ச்சத்து செரிமான அமைப்பில் தொந்தரவை ஏற்படுத்தும். அதிகப்படியான பப்பாளியை உட்கொள்வது வயிற்றுப் பிடிப்பு, வீக்கம் மற்றும் குமட்டல் ஆகியவற்றை ஏற்படுத்தும்.

ALSO READ: தர்பூசணி ஜூஸ்: அள்ள அள்ள குறையாத நன்மைகள் இருக்கும் கோடைகால நண்பன்

நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தானது
பப்பாளி இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கும். இத்தகைய நிலை நீரிழிவு (Diabetes) நோயாளிகளுக்கு ஆபத்தானது. ஆகையால், குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் பப்பாளியை அதிகம் உட்கொள்ளும் முன், மருத்துவரை அணுகுவது முக்கியம். நீங்கள் ஒரு நீரிழிவு நோயாளியாக இருந்து, அதற்கான மருந்துகளை எடுத்துக்கொண்டிருந்தால், கண்டிப்பாக மருத்துவரை ஆலோசித்தே பப்பாளி பழத்தை உட்கொள்ள வேண்டும். 

ஒவ்வாமை ஏற்படும்
பப்பாளி சாப்பிடுவதால் சிலருக்கு ஒவ்வாமை (Allergy) ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இவற்றால் சிலருக்கு சில எதிர்விளைவுகளும் ஏற்படலாம். வீக்கம், தலைச்சுற்றல், தலைவலி மற்றும் அரிப்பு ஆகியவை இந்த எதிர்விளைவுகளில் அடங்கும். ஆகையால் ஒவ்வாமை பிரச்சனை உள்ளவர்கள் பப்பாளி பழத்தை உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது.

ALSO READ: ஜூஸ் அல்லது டீயுடன் மருந்து சாப்பிடுகிறீர்களா? உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News