ஒருவரின் அழகே புன்னகை தான், அப்படி நாம் புன்னகைக்கும்போது பற்கள் பளிச்சென்று வெண்மையாக இருந்தால் அந்த புன்னகைக்கே கூடுதல் அழகு கிடைக்கும், பற்கள் கறைபடிந்து இருந்தால் அது பார்ப்பதற்கே அழகாக இருக்காது.  பிரகாசமான புன்னகை தான் உங்கள் தோற்றத்தை மெருகேற்றி காண்பிக்கும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.  பற்கள் ஆரம்பத்தில் வெண்மையாக இருந்தாலும் காலப்போக்கில், பற்கள் நிறமாற்றம் அடைந்து அல்லது கறை படிந்து காணப்படும்.  முதுமை, அடர் நிற பானங்கள் குடிப்பது அல்லது சில உணவுகளை உட்கொள்வது, புகைபிடித்தல் போன்ற பல்வேறு காரணிகள் பற்கள் நிறமாற்றம் அடைய காரணமாக இருக்கிறது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | கோடை வந்து விட்டது... குழந்தைகளுக்கு ‘இந்த’ உணவுகளை கொடுக்காதீங்க!


சிறந்த பல் மருத்துவரிடம் சென்று நாம் சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் பற்களின் இயற்கையான வெள்ளை நிறத்தை மீட்டெடுக்கவும், புன்னகையின் தோற்றத்தை அதிகரிக்கவும் முடியும்.  நீங்கள் ஏதேனும் கிளினிக்கில் பற்களை வெண்மையாக்க செல்லலாம்.  மருத்துவரிடம் பற்களை வெண்மையாக்க செல்லும்போது உங்கள் ஈறுகள், கன்னங்கள் மற்றும் நாக்கு போன்றவற்றிற்கு எந்தவித சேதமும் ஏற்படாமல் மருத்துவர் பார்த்துக்கொள்வார்.  உதடுகள் மற்றும் மென்மையான திசுக்கள் ப்ளீச்சிங் கரைசலில் வருவதைத் தடுக்க, பல் மருத்துவர்கள் உங்கள் ஈறுகளில் ஒரு ஜெல்லைப் பயன்படுத்துகின்றனர். 



தேநீர், காபி மற்றும் பிற உணவுப் பழக்கவழக்கங்கள் நமது பற்களின் ஆரோக்கியத்தில் முக்கியமான பங்கினை வகிக்கின்றது.  வயதாகும்போது பற்களின் பற்சிப்பி தேய்ந்து போகத் தொடங்குவதால் பற்கள் நிறமாற்றம் அடைகிறது.  புகைபிடித்தல் உங்கள் பற்களை சேதப்படுத்தும் என்பதால் அதனை தவிர்ப்பது நல்லது.  பற்களில் பிளேக் மற்றும் பாக்டீரியாக்களின் அதிகரிப்பு போன்ற வாய்வழி பிரச்சனைகளை உருவாக்கும் அதிக ஆபத்தை உருவாக்குகிறது.  நீங்களே ஏதேனும் வைத்தியத்தை எடுத்துக்கொள்ளாமல் முடிந்தவரை மருத்துவரிடம் சென்று பற்களை வெண்மையாக்குவது நல்லது.


மேலும் படிக்க | நாள் முழுவதும் கணிணியில் வேலையா.. 20-20-20 விதியை கண்டிப்பாக பின்பற்றவும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ