தண்ணீர் அதிகம் குடித்தால் சிறுநீரகத்திற்கு இவ்வளவு ஆபத்தா?

தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லது என்று கூறப்பட்டாலும் அதிகளவில் தண்ணீர் குடிப்பதால் நமது உடலின் முக்கியமான உறுப்பான சிறுநீரகம் பாதிக்கப்படுகிறது.  

Written by - RK Spark | Last Updated : Apr 1, 2023, 08:15 AM IST
  • உடல் எடையில் 50% முதல் 70% வரை நீர் உள்ளது.
  • உடலின் உறுப்புகள், செல்கள் மற்றும் திசுக்கள் சரியாக செயல்பட நீர் தேவைப்படுகிறது.
  • உடல் செயல்பாடு மற்றும் உடல் எடையை பொறுத்து நாம் குடிக்கும் நீரின் அளவு அமைகிறது.
தண்ணீர் அதிகம் குடித்தால் சிறுநீரகத்திற்கு இவ்வளவு ஆபத்தா? title=

உடலை நீரேற்றமாக வைத்திருப்பதன் மூலமே ஒருவரது உடல் ஆரோக்கியம் தீர்மானிக்கப்படுகிறது, தண்ணீர் உடலுக்கு அவசியமானது ஆனால் தண்ணீர் உட்கொள்ளும் அளவில் கவனம் தேவை.  தண்ணீர் நமது உடல் எடையில் 50% முதல் 70% வரை உள்ளது மற்றும் தண்ணீர் தான் உடலில் முதன்மையான இரசாயனமாகவும் உள்ளது.  உயிர்வாழ தண்ணீர் அவசியம், ஒருவரது உடலின் உறுப்புகள், செல்கள் மற்றும் திசுக்கள் அனைத்தும் சரியாக செயல்பட தண்ணீர் தேவைப்படுகிறது.  ஆரோக்கியமான நபர்களுக்கு, அதிக தண்ணீர் குடிப்பது பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.  எப்போதாவது, விளையாட்டு வீரர்கள் நீண்ட அல்லது கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபடும் போது தங்களை அதிகமாக நீரேற்றமாக வைக்க தண்ணீரை குடிக்கலாம்.  ஆனால் அதிக அளவு தண்ணீரை குடிக்கும் போது சிறுநீரகங்கள் அதிகப்படியான தண்ணீரை அகற்ற முடியாமல், இரத்தத்தின் உப்பு செறிவு நீர்த்துப்போய் ஆபத்தை ஏற்படுத்தும்.

மேலும் படிக்க | கோடை வந்து விட்டது... குழந்தைகளுக்கு ‘இந்த’ உணவுகளை கொடுக்காதீங்க!

ஒரு நபர் ஒவ்வொரு நாளும் எவ்வளவு தண்ணீர் உட்கொள்ள வேண்டும் என்பதற்கான தெளிவான தகவல்கள் இல்லை.  ஒருவரது உடல் செயல்பாடு மற்றும் உடல் எடை ஆகிய இரண்டும் தான் உங்கள் உடலுக்கு எவ்வளவு தண்ணீர் தேவை என்பதை தீர்மானிக்கும்.  இருப்பினும் சராசரி நாட்களில் 3 லிட்டர் தண்ணீரும், கோடையில் 3.5 லிட்டர் தண்ணீரும் குடிப்பது நல்லது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.  அதிகப்படியாக தண்ணீர் குடிப்பதால் சிறுநீரகங்கள் நேரடியாக பாதிக்கப்படுகின்றன.  சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்க அதிக தண்ணீர் குடிப்பது அவசியம் என்று பலர் நம்புகிறார்கள், ஆனால் அது தவறு.  அதிகளவு தண்ணீர் குடிப்பதால் உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்ற சிறுநீரகம் கடினமாக உழைக்கிறது, இதனால் சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்படும்.

சிறுநீரகத்தின் செயல்பாடு மந்தமடைவதால் கவலையாகவும், சோர்வாகவும் உணர நேரிடும்.  நிறைய தண்ணீர் உட்கொண்ட பிறகும் உங்களால் சிறுநீர் கழிக்க முடியாவிட்டால், உங்கள் சிறுநீரகங்கத்தின் திறனில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.  சிறுநீரகத்தின் மந்தமான செயல்பாட்டினால் சோடியம் மற்றும் பிற எலக்ட்ரோலைட்டுகள் நீர்த்துப்போய், நாம் பருகும் நீர் நச்சாக மாறுகிறது.  மேலும் இது உங்கள் மூளையிலுள்ள செல்களிலும் சேதத்தை விளைவிக்கிறது.

மேலும் படிக்க | புற்று நோய் முதல் பல நோய்களுக்கு அருமருந்தாகும் கோதுமை புல் ஜூஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News