உடல் பருமனுடன் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, உடல் எடை குறைவாக இருப்பவர்கள் கூட வயிற்று தொப்பையை குறைக்க சிரமப்படுகிறார்கள். இது, பல்வேறு காரணங்களால் உண்டாகலாம். இதனால் இருதய நோய், சர்க்கரை நோய், கல்லீரல் பாதிப்பு, குழந்தையின்மை போன்ற பல வகையான பாதிப்புகள் வர வாய்ப்பிருக்கிறது. இது குறித்து கூறும் மருத்துவர்கள், நன்றாக சாப்பிட்டு நன்றாக உடற்பயிற்சி செய்தாலே இந்த பிரச்சனை தீர்ந்து விடும் என்று கூறுகின்றனர். இதில், உடல் எடையை குறைக்கவும் தொப்பையை குறைக்கவும் ஒரு சில யோகாசனங்கள் வழிவகை செய்கின்றன. அவை என்னென்ன யோகாசனங்கள்..? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1.ஹலாசனம்:


>நீங்கள் உங்கள் பின்புறமாக படுத்துக் கொள்ளும்போது உங்கள் உள்ளங்கைகள் உங்களுக்கு அடுத்த தரையில் இருக்க வேண்டும்.


>உங்கள் வயிற்று தசைகளைப் பயன்படுத்தி, உங்கள் கால்களை 90 டிகிரி உயர்த்தவும்.


>உங்கள் உள்ளங்கைகளை தரையில் உறுதியாக வைக்கவும். 


>கால்கள் உங்கள் தலையின் கீழ் வைக்கப்பட வேண்டும்.


>தேவைப்பட்டால், உங்கள் உள்ளங்கைகளால் முதுகிம் கீழ் பகுதியை தாங்கலாம். 


>பொறுமையாக மூச்சை இழுத்து விடவும். 


>இப்படி 15-20 விநாடிகள் வரை செய்யலாம். 


மேலும் படிக்க | தொப்பை கரைந்து உடல் எடை குறைய... இலவங்கப்பட்டையை இப்படி சாப்பிடுங்க போதும்


2.சக்ராசனா:


>தரையில் அமர வேண்டும். தலையின் இருபுறங்களிலும் கையை வைக்க வேண்டும். 


>மெதுவாக மூச்சை இழுத்து விட்டு, ஆர்ச் வடிவம் போல உங்கள் உடலை தூக்க வேண்டும்.


>இதை செய்யும் போது உங்கள் உடலின் எடையை நீங்கல் இடுப்பு எலும்பில் உணர வேண்டும். 


>இப்படி 15-20 விநாடிகள் வரை செய்யலாம். 


3.தனுராசனா:


>மூச்சை ஆழமாக இழுத்து விட்டு, குப்புற படுக்கவும். 


>மெதுவாக உங்கள் கைகள் மற்றும் கால்களை உயர்த்தவும். மூச்சு விடுவது முக்கியம். 


>இப்படி 15-20 விநாடிகளுக்கு செய்யலாம். 


4.சந்தோலனாசனா:


>ஆங்கிலத்தில் இந்த ஆசனத்தை ப்ளாங்க் என்பார்கள். 


>குப்புற படுத்து உங்கள் கைகளை தரையில் வைக்கவும். 


>மெதுவாக உங்கள் இடுப்பு, முட்டி, உடலின் மேற்பகுதி ஆகியவற்றால் எழுந்திருக்கவும். உள்ளங்கை தரையில் இருக்க வேண்டும். 


>கை நேராக இருக்க வேண்டும். முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும். 


5.வசிஷ்டாசனா:


>இதை மேற்கூறிய சந்தோலனாசனா பயிற்சியில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். 


>இடது புறம் திரும்பி, இடது கையை தரையில் இருந்து தூக்க வேண்டும். 


>கால்களை சீராக வைக்க வேண்டும். 


>இதே போல வலது புறமும் செய்ய வேண்டும். 


6. உஸ்த்ராசனா:


>முட்டி போட்டு உங்களது கைகளை நீட்டவும். 


>பின்புறமாக சாய்ந்து உங்கள் கரங்களால் பாதங்களை தொட வேண்டும். 


>மூச்சை சில விநாடிகளுக்கு இழுத்து விட வேண்டும். 


யோகா உடல் எடையை குறைக்குமா..? 


யோகாசனங்களினால் உடலில் பல்வேறு நல்ல மாற்றங்கள் ஏற்படுகின்றன. மனநலன், உடல் நலன் ஆகிய இரண்டையும் யோகாசனம் சரிசெய்கிறது. இது, உடல் எடையை குறைக்கவும் வழி வகுப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. யோகாவினால் உடலில் உள்ள கொழுப்பு குறைந்து தசைகள் வலிமையாகும் எனவும் சில மருத்துவர்கள் கூறுகின்றனர். இருப்பினும், தசை சம்பந்தமான பிரச்சனைகள் இருப்போர் யோகாசனங்களை செய்யும் முன்னர் தகுந்த மருத்துவரிடம் ஆலோசனை கேட்ட பின்னர் இந்த முயற்சிகளை கடைப்பிடிக்கலாம். 


மேலும் படிக்க | எச்சரிக்கை! அளவிற்கு அதிக முட்டை ஆரோக்கியத்தை காலி செய்து விடும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ