உடல் எடை குறைக்க டிப்ஸ்: தற்போது உடல் எடை அதிகரிப்பது என்பது சகஜமாகிவிட்டது. பொதுவாக, வேலை செய்பவர்கள் எடை அதிகரிப்பதால் அதிகம் கவலைப்படுவார்கள். உட்கார்ந்து வேலை செய்யும் இளைஞர்களிடையே உடல் எடை அதிகரிப்பு பிரச்சனை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. உடல் பருமன் அதிகரிப்பால், பல நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் பன்மடங்கு அதிகரிக்கும். அத்தகைய சூழ்நிலையில், மக்கள் உடல் எடையை குறைக்க பல முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இருப்பினும் சரியான பலனை பெறுவதில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எனவே நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், சீரான உணவு, உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். மறுபுறம் நீங்கள் உங்கள் எடையை வேகமாகக் குறைக்க விரும்பினால் இதற்கு தினமும் ஒரு பானத்தை உட்கொள்ள வேண்டும்; இந்த பானத்தை வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.


மேலும் படிக்க | யூரிக் அமிலத்தை குறைக்கும் ஆற்றல் கொண்ட 3 அபூர்வ இலைகள் - ஈஸியாக கிடைக்கும்


ஆப்பிள் சைடர் வினிகர் (பெர்ரி மற்றும் எலுமிச்சையுடன்)
ஃபிரோஜன் பெர்ரி: 2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு: 1 டீஸ்பூன்
ஆப்பிள் சீடர் வினிகர்: 1 டீஸ்பூன்
ஐஸ் மற்றும் தண்ணீர் 
தேன்: 1 டீஸ்பூன்


செய்முறை:
முதலில் ஒரு கப்பில் பெர்ரிகளை போடவும்.
ஒரு கரண்டியின் உதவியுடன் அவற்றை மசிக்கவும்.
இந்த எடையைக் குறைக்கும் பானத்தை இனிமையாக்க விரும்பினால், அதில் தேன் சேர்க்கவும்.
கப்பில் எலுமிச்சை சாறு மற்றும் ஆப்பிள் சைடர் வினிகர் கலக்கவும். இப்போது அதில் ஐஸ் போட்டு, பின்னர் தண்ணீரை நிரப்பவும்.
குடிப்பதற்கு முன் குறைந்தது ஒரு நிமிடம் ஒரு ஸ்பூனால் அனைத்து பொருட்களையும் கலக்கவும்.


இலவங்கப்பட்டை மற்றும் தேன்
இலவங்கப்பட்டை: 2 டீஸ்பூன்
தேன்: 1 டீஸ்பூன்
சூடான நீர்: 1 கப் அல்லது 250 மிலி


செய்முறை:
தண்ணீரை சூடாக்கி அதில் இலவங்கப்பட்டை சேர்க்கவும்.
தண்ணீரில் தேன் சேர்ப்பதற்கு முன், குறைந்தபட்சம் அரை மணி நேரம் குளிர வைக்கவும். தேனில் இருக்கும் சக்தி வாய்ந்த என்சைம்களை வெப்பம் செயலிழக்கச் செய்கிறது. 
பின்னர் இந்தப் பொருட்களை கலந்து இந்த பானத்தை உட்கொள்ளுங்கள்.


டார்க் சாக்லேட் காபி
தண்ணீர் 1 கப்/250 மிலி
ஆளி விதை: ½ தேக்கரண்டி
டார்க் சாக்லேட் (துருவியது): 1 டீஸ்பூன்
பிளாக் காபி: 1 தேக்கரண்டி


செய்முறை:
ஒரு கப்பில் பிளாக் காபி மற்றும் சூடான நீரை சேர்க்கவும். ஆளி விதைகளை சேர்ப்பதற்கு முன் நன்றாக கலக்கவும்.
பின்னர் அதில் டார்க் சாக்லேட் போடவும். இப்போது டார்க் சாக்லேட் காபி ரெடி.


திராட்சைப்பழம் மற்றும் வெள்ளரி
வெள்ளரிக்காய்: 1
நறுக்கிய எலுமிச்சை: 1
திராட்சைப்பழம்: 1 (நடுத்தர அளவு)
தண்ணீர்: 1 கப்/250 மிலி


செய்முறை
அனைத்து பொருட்களையும் நறுக்கவும்.
அவற்றை தண்ணீருடன் ஒரு பிளெண்டரில் போடவும்.
எல்லாவற்றையும் நன்கு கலக்கி பின்னர் குடிக்கவும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | மூட்டுவலி வலிக்கு BYE சொல்லுங்க! இந்த உணவை சாப்பிட்டா எலும்புகள் வலுவாகும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ