கல்லீரல் என்பது செரிமான அமைப்பின் ஒரு முக்கியமான உறுப்பு ஆகும். உடலில் புரதங்கள், கொலஸ்ட்ரால் மற்றும் பித்த உற்பத்தி முதல் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை சேமித்து வைப்பது வரை பல முக்கிய செயல்பாடுகளைச் செய்யும் ஆற்றல்மிக்க உறுப்பு கல்லீரல் ஆகும். ஆரோக்கியமான கல்லீரல் சிறந்த ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. எனவே, ஆரோக்கியமான கல்லீரலுக்கு என்ன உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதை அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குளிர் பானங்கள் மற்றும் சோடா


குளிர் பானங்கள் மற்றும் சோடா கல்லீரலில் பிரச்சனையை ஏற்படுத்தும். இவற்றில் அதிக அளவு சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. அவை கல்லீரலுக்கு பெரும் தீங்கு விளைவிக்கும். இவை உடல் பருமனை அதிகரிக்கின்றன. 


மைதா


மைதா மாவில் செய்யப்பட்ட உணவுகள் சுவையானது தான். ஆனால் தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் இல்லாத மைதாவை சாப்பிடுவதை நீங்கள் தவிர்க்க வேண்டும். இது கல்லீரலுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி இவற்றை உட்கொள்வதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்கலாம். 


மேலும் படிக்க | அளவுக்கு அதிகமான புரதம் இதயம் - சிறுநீரகத்தை பாதிக்கும்! எச்சரிக்கும் நிபுணர்கள்!


துரித உணவுகள்:


துரித உணவுகளும் கல்லீரல் பாதிக்கப்படுவதற்கு ஒரு பெரிய காரணமாகும். துரித உணவுகள் நீண்ட நேரம் கெட்டுப் போகாமல் இருக்க அவற்றில் அஜினோமோட்டோ பயன்படுகிறது. இதனை பயன்படுத்துவதினால் உங்கள் கல்லீரலின் செயல் திறன் பலவீனமடைகிறது.


சர்க்கரை:


பலர் இனிப்புகளை விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் உடல் பருமனை அதிகரிக்க சர்க்கரை வேலை செய்கிறது. இதனுடன், இது கல்லீரலையும் அதிக அளவில் சேதப்படுத்தும். எனவே, சர்க்கரையை சாப்பிட அதிகம் விரும்புகிறீர்கள் என்றால், கவனமாக இருங்கள். ஏனெனில் சர்க்கரை ஆல்கஹாலை போலவே கல்லீரலை சேதப்படுத்தும்.


மது:


அதிகப்படியான ஆல்கஹால் கல்லீரலை மோசமாக பாதிக்கிறது. தினமும் மது அருந்தினால், அது உங்கள் கல்லீரலை சேதப்படுத்தும். இதனால் ரத்த வாந்தி, மஞ்சள் காமாலை, புற்றுநோய் போன்ற பிரச்னைகள் ஏற்படும். அதனால் மது அருந்தக் கூடாது.


வலி நிவாரண மாத்திரைகள்


வலி நிவாரணிகள் கல்லீரலில் மிகவும் மோசமான விளைவையும் ஏற்படுத்துகின்றன. இத்தகைய மருந்துகளை நீண்ட நேரம் உட்கொண்டால் கல்லீரல் பாதிப்பு ஏற்படும். மனச்சோர்வு மருந்தும் சில நேரங்களில் இதற்கு காரணமாகிறது. மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ளும் தவறை செய்யாதீர்கள்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | இரட்டை கன்னம் முக அழகை கெடுக்கிறதா... சில ‘எளிய’ பயிற்சிகள் செய்தால் போதும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ