என்ன செய்தாலும் உடல் எடை எக்குத்தப்பாக ஏறுதா... இந்த விஷயங்களை உடனே கவனிங்க!
Health Tips: நல்ல உடற்பயிற்சி செய்தும் உடல் எடை ஏறுவதாக சிலர் கவலைப்படுகின்றனர். அதற்கு இவையும் முக்கிய காரணங்களாக இருக்கின்றன.
Health Tips In Tamil: உடல் பருமன் என்பது இந்த காலகட்டத்தில் அதிகமானோரிடம் காணப்படுகிறது. அவர்களுக்கே தெரியாமல் குறுகிய காலத்தில் உடல் எடை ஏறுவதாலும் சிலர் பாதிக்கப்படுகின்றனர். அதாவது ஒரு சிலர் சரியான ஊட்டச்சத்துடன் உணவுப்பழக்கம் கடைபிடித்தாலும், தினந்தோறும் உடற்பயிற்சி மேற்கொண்டாலும் உடல் எடை காரணமின்றி ஏறும். இது அவர்களுக்கு மிகவும் கவலை அளிக்கக் கூடியதாக இருக்கும்.
உடல் எடையை குறைக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்தும் அதற்கான பலன்கள் கிடைக்கவில்லை என்றால் அது ஊக்கமளிக்கும் வகையில் இருக்காது. ஆனால், அப்படிப்பட்டவர்கள் சில விஷயங்களை தெரிந்துகொள்வதும் அவசியம் ஆகும். அதாவது, அதிக கலோரிகள் கொண்ட உணவு, சர்க்கரைகள் நிறைந்த உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகள் ஆகியவற்றை சாப்பிடாமலும் ஒருவருக்கு உடல் எடை ஏறும் என்பதை தெரிந்திருக்க வேண்டும். இதை தாண்டி சில விஷயங்கள் உடல் எடையை அதிகரிக்கும் காரணியாக இருக்கும். எனவே, ஒருவர் அதில் கவனம் செலுத்தி உடல் எடையை குறைக்க முயற்சிக்கலாம்.
வேகமாக சாப்பிடுவது
வேகவேகமாக சாப்பிடுவது செரிமான அமைப்பில் பிரச்னையை ஏற்படுத்தும், இது உடல் எடையை அதிகரிக்க உதவும். நீங்கள் வேகவேகமாக சாப்பிடுவதால் வயிறு நிறைவது மூளைக்கு சரியாக பதிவாகாது. இதனால் அதிக உணவுகளை நீங்கள் சாப்பிடுவீர்கள். மேலும், சரியாக மென்று உண்ணவில்லை என்றால் ஊட்டச்சத்து முழுமையாக கிடைக்காது, வயிறும் நிரம்பாது, அதிகமாக பசி எடுக்கும். எனவே, மெதுவாக சாப்பிட்டால் பசிக்கான ஹார்மோன்கள் சீராக சுரக்கும். குறைவான கலோரியை உட்கொள்வீர்கள், உடல் ஆரோக்கியமாகும்.
சாப்பிடாமல் இருப்பது
நீங்கள் சாப்பிடாமல் இருப்பதும் உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும். சாப்பிடாமல் இருப்பது வளர்ச்சிதை மாற்றத்தை குறைக்கும். சீரான நேரத்தில் சாப்பிடவில்லை என்றால் இன்சுலின் எதிர்ப்பு வரும். பசி அதிகம் எடுக்கும், அதிகம் சாப்பிடுவீர்கள். சாப்பிடாமல் இருப்பதால் வளர்ச்சிதை மாற்றம் மெதுவாகி கலோரிகளும், கொழுப்புகளும் உடலில் தங்கிவிடும். உடல் எடை அதிகரிக்கும்.
மன அழுத்தம்
நீங்கள் சமூக வலைதளங்கள் மூலமாகவும், பல்வேறு சமூக காரணிகள் மூலமாகும் மன அழுத்தத்தில் இருந்தால் சட்டென உடல் எடை ஏறும். கார்டிசால் ஹார்மோன் சுரக்கும் அளவு அதிகரிக்கும். இதனால் பசி மற்றும் உணவை பார்த்தாலே சாப்பிட வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். இது அடிவயிற்றில் கொழுப்பை தங்கச்செய்யும். இந்த அடிவயிறு கொழுப்பு உடல் பருமன், நீரிழிவு நோய், இதய நோய் உள்ளிட்டவைக்கு வழிவகுக்கும்.
மற்ற காரணங்கள்
அதேநேரத்தில், நீங்கள் காற்று மாசுபாடு ஏற்படும் சூழலில் வாழ்ந்து வந்தாலும் உடல் பருமன் ஏற்படலாம். மேலும், கருத்தடை மாத்திரைகள், ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கும் மாத்திரைகள், மன அழுத்தத்தை தணிக்கும் மாத்திரைகள், ஸ்டெராய்டுகள் ஆகியவற்றை அதிகமாக எடுத்துக்கொள்வதும் உடல் எடை அதிகரிப்புக்கு காரணமாக இருக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
மேலும் படிக்க | செரிமான பிரச்சனைகளை லேசாக எண்ன வேண்டாம்: இது மாரடைப்புக்கும் வழிவகுக்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ