தோல் பராமரிப்பு குறிப்புகள்: நாள் முழுவதும் நாம் ஓடிக் கொண்டே இருப்பதால், பெரும்பாலானவர்களால் சருமத்தை கவனித்துக்கொள்ள முடிவதில்லை, ஆனால் இரவில் தூங்கும் போது சில வேலைகளைச் செய்தால், சருமத்திற்கு நிறைய நன்மைகள் இருக்கும். சரும நிபுணர்களின் கூற்றுப்படி, சருமம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் நீங்கள் விலகி இருக்க வேண்டும் என்றால், படுக்கைக்குச் செல்லும் முன் இந்த 5 விஷயங்களைச் செய்ய வேண்டும். அவை என்னவென்று இங்கே தெரிந்துக்கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சருமத்தை பராமரிக்க தூங்கும் முன் இந்த வேலையை செய்யுங்கள்


1. முகத்தை தண்ணீரில் கழுவுவது அவசியம்
தோல் பராமரிப்புக்காக, இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் சில விஷயங்களைச் செயல்படுத்துவது அவசியமாகும். அதன்படி அவற்றில் முதலில் சுத்தமான தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். இரவில் தூங்கும் முன் முகத்தை சுத்தமான தண்ணீரில் கழுவுவது, சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கும்.


மேலும் படிக்க | அழகை ரசிக்கறவங்க பாதாமை வேண்டான்னு சொல்வாங்களா? ஆரோக்கியத்திற்கும் பாதாம் 


2. நேச்சுரல் ஃபேஸ் மாஸ்க்கைப் பயன்படுத்துங்கள்
இரவில் தூங்கும் முன் நேச்சுரல் ஃபேஸ் மாஸ்க்கை முகத்தில் தடவி வந்தால், சருமத்தை ஆரோக்கியமாகவும், சத்தானதாகவும் வைத்துக் கொள்ளலாம். ஹெர்பல் ஃபேஸ் மாஸ்க் சருமத்தில் உள்ள இழந்த ஊட்டச்சத்துக்களுக்கு கூடுதலாக ஈரப்பதத்தை நிரப்புகிறது, இது உங்கள் சருமத்திற்கு எல்லா வகையிலும் ஏற்றதாக் இருக்கும். எனவே தூங்கும் முன் கற்றாழை, முல்தானி, வெள்ளரி அல்லது சந்தனப் பொடியை முகத்தில் தடவலாம்.


3. சருமத்தை ஈரப்பதமாக்குவது அவசியம்
உங்கள் சருமம் வறண்டு போயிருந்தால், தூங்கும் முன் முகத்தில் கிரீம், லோஷன் அல்லது தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம். இவை சருமத்திற்கு ஈரப்பதத்தைக் கொண்டு வரும். இதை அப்ளை செய்து இரவு தூங்கினால் சருமத்தில் ஈரப்பதம் தங்குவதுடன், முன்கூட்டிய சுருக்கங்களும் குணமாகும்.


4. முடியை மசாஜ் செய்வது அவசியம்
தோலுடன், இரவில் தூங்கும் முன் முடியையும் மசாஜ் செய்யலாம். இவ்வாறு செய்வதன் மூலம், நாள் முழுவதும் உள்ள சோர்வு நீங்கி, ஆழ்ந்த உறக்கத்தை பெறலாம். ஆழ்ந்த உறக்கத்தால் உங்கள் சருமம் பளபளக்க ஆரம்பிக்கும்.


5. இந்த வழியில் கண்களை கவனித்துக் கொள்ளுங்கள்
கண்களின் மேற்பரப்பின் பகுதி மிகவும் உணர்திறன் கொண்டது, எனவே இதற்கு கூடுதல் கவனிப்பு தேவை. எனவே கண்களைச் சுற்றியுள்ள தோலில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க கண்களின் கீழ் க்ரீம் பயன்படுத்துவது மிகவும் முக்கியம், எனவே இரவில் தூங்கும் முன் கண்களுக்குக் கீழே கிரீம் தடவ மறக்காதீர்கள்.


(பொறுபுத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | உயர் ரத்த அழுத்தம் இருந்தால் கால்களில் இந்த பிரச்சனைகள் ஏற்படலாம்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ