Home Remedies For White Hair, Coconut Oil: முன்பெல்லாம் வயதானவர்களுக்குதான் நரை முடி வரும். அதுவும், 40 வயது தாண்டுகிறோம் என்பதை உடல் அனுப்பும் சிக்னலாக அந்த நரை முடி பலருக்கும் இருந்தது. தலைமுடி மட்டுமின்றி தாடி, மிசையெல்லாம் நரைக்கும்போது கூட 50 வயதை நெருங்கியிருப்பார்கள். ஆனால், சமீப காலங்களாக இந்த நிலை இல்லை எனலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பள்ளிக்கூடம் செல்லும் பதின்ம வயதினர் முதல் 30 வயதுக்குள் இருக்கும் இளைஞர்கள் வரை பலருக்கும் நரை முடி தென்படுகின்றன. பெரும்பாலனோர் இதனை மரபு ரீதியாக தங்களுக்கு வருகிறது என்று நினைத்து அதனை அசால்ட்டாக நினைக்கின்றனர். சில பேரோ இதனால் தன்னம்பிக்கையை இழந்து, நரை முடியை அவமானமாகவும் கருதுகின்றனர். இளம் வயதிலேயே தலைமுடிக்கு டை அடிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இது சமூக அழுத்தம் மூலம் நிகழ்கிறது என்பது நிதர்சனம்.


இந்த இரண்டு பொருள்கள்


இதற்கு காரணம் மரபணுவாக கூட இருக்கலாம். இருப்பினும், கடினமான மற்றும் அழுத்தமிக்க வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், சூழலியல் மாசுபாடு ஆகியவையும் நரைமுடி ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது. மரபணு சார்ந்த பிரச்னைகள் இல்லையென்றால், நரைமுடி பிரச்னைகளை போக்குவதற்கு சில வீட்டு வைத்திய முறைகளும் உள்ளன.


நரைமுடி பிரச்னையை போக்க நீங்கள் தலையில் தேய்க்கும் தேங்காய் எண்ணெயில் (Coconut Oil) இந்த இரண்டு பொருட்களைக் கலந்து, அதனை தொடர்ந்து பயன்படுத்தி வருவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவை குறித்து இதில் காணலாம். 


மேலும் படிக்க | வைட்டமின் டி குறைப்பாட்டை தீர்க்க இதை செய்யவேண்டாம்! மருத்துவர்கள் எச்சரிக்கை...


நெல்லிக்காய் உடன் கலந்தால் கிடைக்கும் பயன்கள்


நெல்லிக்காயில் பல வகையான சத்துக்கள் உள்ளன. ஆயுர்வேத பண்புகளும் நெல்லிக்காயில் அதிகம் உள்ளன. சறுமத்திற்கு மட்டுமின்றி, தலைமுடிக்கு நெல்லிக்காய் முடிக்கும் நன்மை பயக்கும். 


செய்முறை: 4 ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் 2 முதல் 3 ஸ்பூன் நெல்லிக்காய் பொடியை கலந்து ஒரு பாத்திரத்தில் வைத்து சூடு செய்யவும். இது இதன் சூடு ஆறியவுடன் உச்சந்தலையில் தடவவும். இரவு முழுவதும் காத்திருந்து காலையில் சுத்தமான தண்ணீரில் உங்கள் தலையை கழுவவும். அதன் பலன் சில நாட்களில் தெரியும்.


கொலாஜனை அதிகரிக்கும் நெல்லிக்காய்க்கு உள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், நெல்லிக்காயில் நிறைய இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி உள்ளது. இது முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.


மேலும் படிக்க | தொப்பையை உடனடியாக குறைக்கணுமா? இந்த எளிய பயிற்சிகளை தினமும் செய்யவும்!


மருதாணியை கலந்தால் கிடைக்கும் பிரச்னை


செய்முறை: முதலில் மருதாணி இலைகளை வெயிலில் காய வைக்கவும். தனியே அதில் 4 முதல் 5 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை கொதிக்க வைக்கவும். இப்போது இந்த எண்ணெயில் மருதாணி இலைகளைப் போடவும்.


அதன் பின்னர், எண்ணெயின் நிறம் வர ஆரம்பிக்கவும் அடுப்பின் தீயை அணைக்கவும். இதனை உங்கள் தலைமுடியில் தேய்க்கவும். சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு தலைக்கு தண்ணீர் ஊற்றி குளிக்கவும். தொடர்ந்து இதனை பயன்படுத்தினால் நரைமுடி, கருப்பாகும். 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | முலாம் பழம் ஜூஸ் ரொம்ப பிடிக்குமா... தினமும் குடித்தால் இவ்ளோ நன்மைகள் இருக்கு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ