முலாம் பழம் ஜூஸ் ரொம்ப பிடிக்குமா... தினமும் குடித்தால் இவ்ளோ நன்மைகள் இருக்கு!

Musk Melon Juice Health Benefits: பொதுவாக முலாம் பழ ஜூஸ் பரவலாக அறியப்படுவதுதான். அதே நேரத்தில், கோடை காலத்தில் முலாம் பழ ஜூஸ் மிக முக்கியத்துவம் வாயந்ததாகும். அந்த வகையில், முலாம் பழ ஜூஸை தினமும் குடித்தால் கிடைக்கும் நன்மைகளை இதில் காணலாம். 

கோடை காலம் வந்தாலே தினமும் ஜூஸ் குடிப்பதை வழக்கமாக வைத்திருப்போம். ஆனால், ஆப்பிள் ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ் ஆகியவற்றைதான் அதிகமானோர் குடிப்பார்கள். இருப்பினும், விலை மலிவாகவும், ருசியாகவும், கோடை காலத்திற்கு மிகவும் ஏற்றதான முலாம் பழ ஜூஸை குடிப்பது இரண்டு மடங்கு நல்லதை தரும்.

1 /7

முலாம் பழ ஜூஸ் அல்லது கிர்ணி பழ ஜூஸ்கள் என பொதுவாக அழைக்கப்படும் இந்த பழச்சாறு பொதுவாக அனைத்து இடங்களிலும் கிடைக்கும். கடைகளில் சர்க்கரை சேர்க்காமல் கூட இதனை குடிக்கலாம். பழத்தை வீட்டிற்கு பழத்தை வாங்கிச்சென்று நீங்கள் ஜூஸ் போட்டும் குடிக்கலாம்.   

2 /7

முலாம் பழத்தின் தோலை அகற்றி அதன் நடுவில் இருக்கும் பகுதியை மட்டும் தனியே எடுத்து நீங்கள் ஜூஸ் போட்டுக் குடிக்கலாம். வெள்ளை சர்க்கரைக்கு பதில் நாட்டுச் சர்க்கரை கூட சேர்த்து அதனை அருந்தலாம்.  

3 /7

முலாம் பழத்தில் ஏற்கெனவே 90% தண்ணீர்தான் இருக்கிறது. இது உடலை நீரேற்றமாகவே வைத்திருக்கும். எனவே, இதன் ஜூஸை குடிப்பதும் உங்களின் உடல் எப்போதும் நீரேற்றமாக இருக்க உதவும். 

4 /7

கொட்டிக்கிடக்கும் ஊட்டச்சத்துகள்: கோடை காலத்திற்கு ஏற்ற இந்த பழத்தில் கலோரிகள் மிக மிக குறைவு. அதே நேரத்தில் நார்ச்சத்து அதிகம். கூடுவே, வைட்டமிண் ஏ, வைட்டமிண் சி, போட்டாசியம், புரதம், ஃபோலேட் போன்ற ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன.   

5 /7

செரிமானத்தை சீராக்கும்:  முன்பே சொன்னதுபோல் முலாம் பழத்தில் நார்ச்சத்து அதிகமிருக்கிறது. இது உங்களின் செரிமான மண்டலத்திற்கு மிகவும் நல்லது. மலச்சிக்கல் போன்ற பிரச்னைக்கு முலாம் பழ ஜூஸும் நல்ல நிவாரணமாக இருக்கும்.

6 /7

சருமம் சிறக்கும்: ஆண்டிஆக்ஸிடண்டுகள் முலாம் பழத்தில் அதிகம் இருப்பதால், உங்கள் சருமத்தை தூய்மையாக வைத்திருக்க உதவும். எனவே, சருமம் பளபளப்பாக இருக்க இதனை தினமும் சாப்பிடலாம். 

7 /7

ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்: பொட்டாசியம், அதிக நார்சத்து, தண்ணீர் ஆகியவற்றால் முலாம் பழ ஜூஸ் உங்கள் ரத்த அழுத்தத்தை கூட கட்டுபடுத்தும். இதனை தொடர்ந்து எடுத்துகொள்வது நல்லது.