வைட்டமின் டி குறைப்பாட்டை தீர்க்க இதை செய்யவேண்டாம்! மருத்துவர்கள் எச்சரிக்கை...

Symptoms Of Vitamin D Deficiency: வைட்டமின் டி குறைபாட்டிற்காக வைட்டமின் டி சப்ளிமெண்ட் எடுத்துக் கொள்பவரா நீங்கள்? கவனமாக இருங்கள்! பிரச்சனை வேறு ரூபத்தில்  காத்துக் கொண்டிருக்கலாம்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 14, 2024, 05:51 AM IST
  • வைட்டமின் டி சப்ளிமெண்ட் எடுத்துக் கொள்பவரா?
  • பிரச்சனை வேறு ரூபத்தில் காத்துக் கொண்டிருக்கலாம்
  • வைட்டமின் டி சப்ளிமெண்ட்களின் பக்கவிளைவுகள் மருத்துவர்களின் அலர்ட்
வைட்டமின் டி குறைப்பாட்டை தீர்க்க இதை செய்யவேண்டாம்! மருத்துவர்கள் எச்சரிக்கை... title=

வைட்டமின் டி குறைபாடு காரணமாக, உடலில் பல வகையான பிரச்சினைகள் தோன்றத் தொடங்குகின்றன, முடி உதிர்தல் மற்றும் சோர்வு என பல அறிகுறிகள் மூலம் இந்த குறைபாட்டை உணரலாம். அதற்காக சப்ளிமெண்டாக மாத்திரைகளை எடுத்துக் கொள்பவர்கள் எச்சரிக்கையுடன் கவனமாக இருக்க வேண்டும். வைட்டமின் டி குறைபாட்டிற்காக வைட்டமின் டி சப்ளிமெண்ட் எடுத்துக் கொள்பவரா நீங்கள்? கவனமாக இருங்கள்! பிரச்சனை வேறு ரூபத்தில்  காத்துக் கொண்டிருக்கலாம்...

ஏனென்றால், எலும்புகள், பற்கள் மற்றும் தசைகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் முக்கியமான ஊட்டச்சத்தான வைட்டமின் டி பெரும்பாலும் சூரிய ஒளி உடலில் படும்போது, உடலால் உற்பத்தி செய்யப்படும் ஒரு வைட்டமின்.  இந்த வைட்டமின் உடலால் உருவாக்கப்படவில்லை என்றால் ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படுகிறது. வைட்டமின் டி குறைபாட்டின் அறிகுறிகளையும், வைட்டமின் டி குறைபாட்டை எவ்வாறு சமாளிப்பது என்பதையும் தெரிந்துக் கொள்வோம்.

வைட்டமின் டி குறைபாட்டின் அறிகுறிகள்
எலும்புகள் பலவீனம்: வைட்டமின் டி குறைபாடு காரணமாக, எலும்புகள் பலவீனமடையத் தொடங்குகின்றன, எலும்பு மஜ்ஜை தொடர்பான பிரச்சினைகள் தோன்றத் தொடங்குகின்றன.
பல் பிரச்சனைகள்: வைட்டமின் டி குறைபாடு பற்களின் வலிமையைக் குறைக்கும். பல்வலி மற்றும் பல் எனாமலில் ஈறு பிரச்சனைகளை தோன்றச் செய்யும்.
தசை பலவீனம்: வைட்டமின் டி குறைபாடு தசை பலவீனத்தை ஏற்படுத்தும், சோர்வு அதிகமாகும் என்பதுடன் வேலை செய்யும் திறனையும் குறைக்கும்.
மனச்சோர்வு மற்றும் உடல் சோர்வு: வைட்டமின் டி குறைபாடு காரணமாக, மனச்சோர்வு அடிக்கடி ஏற்படும்.  
முடி மற்றும் தோல் பிரச்சனைகள்: வைட்டமின் டி குறைபாடு இருப்பவர்கலின் முடி மற்றும் சருமம் வறண்டு போய் பொலிவிழந்து காணப்படும்.  

மேலும் படிக்க | ஈறுகளில் பயங்கர வலியா? ‘இந்த’ வீட்டு வைத்தியங்களை வைத்து சரி செய்து கொள்ளலாம்..

வைட்டமின் டியை எவ்வாறு பெறுவது?
சூரிய ஒளியில் போதுமான நேரம் இருக்க வேண்டும். சூரிய ஒளியில் வேலை செய்வது உடலில் வைட்டமின் டி குறைபாட்டை நீக்க உதவுகிறது. இது வைட்டமின் டியை நிரப்புவதற்கான எளிய வழி என்றாலும், வைட்டமின் டி நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியம். 

உணவுகளில், முட்டை, மீன், பால், தயிர் மற்றும் உலர் பழங்களில் வைட்டமின் டி காணப்படுகிறது. இவற்றைச் தினசரி அடிப்படையில் சாப்பிடுவதன் மூலம் வைட்டமின் டி குறைபாட்டைப் போக்கலாம்.

வைட்டமின் டி கொண்ட உணவுப் பொருட்களை எடுத்துக் கொண்ட பிறகும் வைட்டமின் டி அளவு மிகவும் குறைவாக இருந்தால், மருத்துவரிடம் கலந்தாலோசித்த பிறகு சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்ளலாம். மருத்துவரின் வழிகாட்டுதலின் கீழ் மட்டுமே சப்ளிமெண்ட்களை எடுத்துக் கொள்ளுங்கள், வைட்டமின் டி நச்சுத்தன்மை ஏற்பட்டால் வேறுவிதமான பிரச்சனைகள் ஏற்படும்.

வைட்டமின் டி சப்ளிமெண்ட்களால் என்ன பிரச்சனை ஏற்படும்?
வைட்டமின் டி நச்சுத்தன்மை என்பது வைட்டமின் டி அதிகமாக உட்கொள்வதால் ஏற்படும் ஒரு நிலை. பொதுவாக இது வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் அதிகமாக உட்கொள்வதால் ஏற்படுகிறது.

வைட்டமின் டி சப்ளிமெண்ட் எடுத்துக் கொண்டால், சிலருக்கு  வாந்தி, குமட்டல், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, எடை இழப்பு, உடல் மற்றும் மனச்சோர்வு, முடி உதிர்தல், சரும வறட்சி ஏற்படும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க - அசிங்கமான தொப்பை கொழுப்பை அசால்டாய் குறைக்க மஞ்சள் ஒன்று போதும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News