Corona Vaccine News: கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிகப்பெரிய நல்ல செய்தி என்னவென்றால், கொரோனா தடுப்பூசி விரைவில் இந்தியாவுக்கு வருகிறது. பல தடுப்பூசி சோதனைகள் நடந்து வருகின்றன. இதுவரை நடத்தப்பட்ட அனைத்து சோதனைகளும் வெற்றிகரமாக உள்ளன. தடுப்பூசி பரிசோதனையின் இரண்டாம் கட்டம் தொடங்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஸைடஸ் காடிலா (Zydus Cadila) நிறுவனம் தரப்பில், "கோவிட் -19 நோய்க்கு எதிராக வடிவமைக்கப்பட்ட பிளாஸ்மிட் டி.என்.ஏ தடுப்பூசி "ஜைகோவ்-டி" (ZyCoV-D) இன் இரண்டாம் கட்ட மருத்துவ சோதனை தொடங்கியுள்ளது. அதேபோல மருத்துவ பரிசோதனைகளின் முதல் கட்டம் வெற்றிகரமாக முடிந்தது எனவும் தெரிவித்துள்ளது.


முதல் கட்ட மருத்துவ பரிசோதனைகளில் தடுப்பூசி அளவைக் கொடுக்கும்போது மக்கள் ஆரோக்கியமாகக் காணப்படுவதாக ஜைடஸ் காடிலா தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசியின் தாக்கத்தை அவர்கள் பொறுத்துக்கொண்டார்கள். எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை. முதற்கட்ட சோதனை ஜூலை 15 அன்று தொடங்கியது.


ALSO READ | வெறும் 35 ரூபாயில் Covid 19 மருந்து.. . சந்தையில் அறிமுகப்படுத்தி சன் பார்மா நிறுவனம்


ஜைடஸ் காடிலா நிறுவனத்தின் தலைவர் பங்கஜ் ஆர். படேல், "இப்போது இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனைகள் செய்யப் போவதாக கூறினார்.


இரண்டு நாட்களுக்கு முன்பு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குநர் ஜெனரல் பால்ராம் பார்கவா, டி.என்.ஏ தடுப்பூசி பரிசோதனையின் முதல் கட்டத்தை ஜைடஸ் காடிலா முடித்துவிட்டதாகவும், 11 பேர் குழு இரண்டாம் கட்ட சோதனையில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.


ALSO READ | Covaxin: இந்தியாவின் முதல் கோவிட் -19 தடுப்பூசி சோதனை 30 வயதான நபருக்கு செலுத்தப்பட்டது


இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் படி, மூன்று தடுப்பூசிகளின் மருத்துவ பரிசோதனைகள் இந்தியாவில் வெவ்வேறு கட்டங்களில் நடந்து வருகின்றன.


ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் (Oxford University) தயாரித்த கோவிட் -19 தடுப்பூசியின் (COVID-19 vaccine) இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட சோதனைகளுக்கு இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ-எஸ்ஐஐ) க்கு இந்திய கட்டுப்பாட்டு ஜெனரல் (டிசிஜிஐ) ஒப்புதல் அளித்துள்ளது.


ALSO READ | கொரோனா வைரஸுக்கு எதிரான வெற்றி: அடுத்த கட்டத்திற்கு நகரும் Oxford Coronavirus Vaccine


இந்தியாவில் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ரா ஜெனெகாவின் கோவிஷீல்ட் (COVISHIELD) மற்றும் கோவிட் -19 தடுப்பூசியை உருவாக்கும் செயல்முறை ஆகியவற்றின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையை நடத்த புனேவின் எஸ்.ஐ.ஐ.க்கு டி.சி.ஜி.ஐ ஒப்புதல் அளித்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


முன்னணி மருந்து நிறுவனமான சன் பார்மா (Sun pharma), கொரோனாவின் லேசான அறிகுறிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக ஃப்ளூகார்ட் என்ற பெயரில் ஆன்டிவைரல் மருந்து ஃபெவிபிராவிரை (favipiravir) அறிமுகப்படுத்தி உள்ளது. ஃப்ளகார்ட்டீன் ஒரு டேப்லெட்டுக்கு ரூ .35 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.