IPL 2018 தொடரில் இருந்து ஸ்டீவன் ஸ்மித் நீக்கப்பட்டதை அடுத்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஸ்மித்துக்கு பதிலாக ஹென்ரிச் க்ளாசன் களம் காணுகின்றார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

IPL-2018 கிரிக்கெட் போட்டிகளின் 11-வது சீசன் அடுத்த ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது. சூதாட்ட புகார் காரணமாக கடந்த இரண்டு சீசனில் விளையாடாத சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த முறை களம் காணுகின்றன. பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள இத்தொடரின் எதிர்வரும் நிலையில் IPL வீரர்களின் மீது எழும் சர்சைகளுக்கும் அளவில்லை.


முன்னதாக தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்கள் ஆட்டத்தின் போது பந்தைச் சேதப்படுத்தியதாக புகார் எழுந்து பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.


இந்த புகார் தொடர்பாக ஆஸ்திரேலியா வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் IPL தொடர்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து ராஜஸ்தான் அணியில் ஸ்டீவன் ஸ்மித் விளையாடும் வாய்பினை இழந்தார்.


இந்நிலையில் தற்போது ஸ்டீவன் ஸ்மித்-க்கு பதிலாக ராஜஸ்தான் அணியில் விளையாட, தென்னாப்பிரிக்கா அணியின் விக்கெட் கீப்பர் ஹென்ரிச் க்ளாசன் இடம்பெற்றுள்ளார். 


முன்னதாக ஹைதராபாத் அணியில் டேவிட் வார்னர்-க்கு பதிலாக அலேஸ் ஹால்ஸ் அணியில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.