ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி உடல்நலம் பாதிப்பு அடைந்ததால், அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நீரிழிவு நோய் மற்றும் நீர்ச்சத்துக் குறைபாடு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு அப்போலோ மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி முன்னால் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்தார் என அப்போலோ மருத்துவமனை அறிவித்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பின்னர் இவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டது. எனவே தமிழக அரசு சார்பில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.  இதில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சசிகலா தரப்பில் பிரமாண வாக்குமூலம் தாக்கல் நேற்று செய்யப்பட்டது. 


இந்நிலையில் அப்பல்லோ குழும தலைவர் டாக்டர் பிரதாப்ரெட்டி இன்று நிருபர்களிடம் அளித்த பேட்டியில்:- 


ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா அழைத்து வரப்பட்டார். இவரது உடல் நல அனைத்து விவரங்களையும் நான் அறிந்து கொண்டேன். அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் சிறப்பு கவனம் செலுத்தினோம். மாரடைப்பு காரணமாக அவர் இறந்தார்.


ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான அனைத்து விவரங்களையும் விசாரணை கமிஷன் முன்பு தாக்கல் செய்துள்ளோம். விசாரணைக்கு அழைத்தால் எப்போது வேண்டுமானாலும் நாங்கள் விளக்கம் கொடுக்க தயார். 


யார், யார் சந்திக்க வேண்டும் என்பதை ஜெயலலிதாவுடன் இருந்தவர்கள் முடிவின் படி மருத்துவர்கள் அனுமதித்தனர். சம்பந்தம் இல்லாதவர்கள் பார்க்க நேரிடும் என்பதால் ஜெயலலிதா தங்கிய அறை மற்றும் சுற்று பகுதியில் ரகசிய கண்காணிப்பு கேமரா நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 


இவ்வாறு அவர் கூறினார்.