+2 விடைத்தாளில் `I love my Pooja` என்று எழுதிய மாணவர்!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த மாதம் 17-ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர் ஒருவர் காதலில் விழுந்துவிட்டதால், தேர்வுக்கு சரியாக படிக்க முடியவில்லை என்று எழுதியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த மாதம் 17-ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர் ஒருவர் காதலில் விழுந்துவிட்டதால், தேர்வுக்கு சரியாக படிக்க முடியவில்லை என்று எழுதியுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் நடந்த இந்த தேர்வில் சுமார் 60 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். 248 மையங்களில் தேர்வுகள் நடந்தன. 5.5 கோடி விடைத்தாள்களை 1.46 லட்சம் ஆசிரியர்கள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் மாணவர் ஒரு தனது விடைத்தாளில் "ஐ லவ் மை பூஜா" (நான் என் பூஜாவை காதலிக்கிறேன்) காதலில் விழுந்துவிட்டதால், என்னால் படிக்க முடியவில்லை சார் என்று விடைத்தாளில் எழுதி இருந்ததை கண்ட ஆசிரியர் அதிர்ச்சி அடைந்து உள்ளார்.