22_வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2019-ம் ஆண்டு மே மாதம் 30-ம் தேதி தொடங்கி ஜூலை 15-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, பாக்கிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 10 நாடுகள் பங்கேற்க உள்ளது. இதில் ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் உலக கோப்பை தகுதி சுற்று கிரிக்கெட் போட்டியில் வென்று இடம் பெற்றது. இந்த உலக கோப்பையில் மொத்தம் 48 ஆட்டங்கள் நடைபெற உள்ளது.


அடுத்த வருடம் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தனது முதல் ஆட்டத்தில் (ஜூன் 5-ம் தேதி) தென் ஆப்ரிக்காவை எதிர்க்கொள்கிறது இந்தியா. அதேபோல உலகமே எதிர்பார்க்கும் இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் ஆட்டம் ஜூன் 16-ம் தேதி நடைபெறுகிறது.


ஏப்ரல் 26-ம் தேதி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை குறித்து முழு அட்டவணை இன்று வெளியிடப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது. இதற்கான முழு அட்டவணையை ஐசிசி செயல் அதிகாரிகள் கமிட்டி இறுதி செய்து, ஐசிசி ஒப்புதல் குழுவுக்கு அனுப்பியுள்ளது. இதனை உறுதி செய்தவுடன் அதிகாரபூர்வ அட்டவணை வெளியிடப்படும். தற்போது ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட பட்டியலில் இந்திய அணி எதிர்கொள்ளும் போட்டிகளின் விவரம் வெளியாகியுள்ளது. 


ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட பட்டியல் விவரம்: 


ஜூன் 5, 2019: இந்தியா - தென் ஆப்பிரிக்கா 


ஜூன் 9, 2019: இந்தியா -  ஆஸ்திரேலியா 


ஜூன் 13, 2019: இந்தியா -  நியூசிலாந்து 


ஜூன் 16, 2019: இந்தியா -  பாகிஸ்தான்


ஜூன் 2, 2019: இந்தியா -  ஆப்கானிஸ்தான் 


ஜூன் 27, 2019: இந்தியா -  வெஸ்ட் இண்டீஸ்


 ஜூன் 30, 2019: இந்தியா -  இங்கிலாந்து 


ஜூலை 2, 2019: இந்தியா -  வங்கதேசம் 


ஜூலை 6, 2019: இந்தியா - இலங்கை