பாகிஸ்தான் நாட்டில் வருகிற ஜூலை 25-ம் தேதி பொதுத் தோ்தல் நடைபெறும் என்று அந்நாட்டு தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாகிஸ்தானில் தற்போதைய பிரதமா் அப்பாஸி தலைமையிலான அரசின் ஆட்சி காலம் வருகிற ஜூன் மாதம் 1-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் அந்நாட்டில் பொதுத்தோ்தல் நடத்துவதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன. 


மேலும் அந்நாட்டு சட்டபடி ஒரு ஆட்சி காலம் முடிவடைந்த 60 நாட்களுக்குள் அடுத்த தோ்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். இந்நிலையில் ஆணையம் ஜூலை 25 முதல் 27-ம் தேதிக்குள் தோ்தல் நடத்தலாம் என்று அந்நாட்டு அதிபா் மம்னூன் ஹூசைனுக்கு இந்த வார தொடக்கத்தில் பரிந்துரை செய்திருந்தது. 


அதன் அடிப்படையில் வருகிற ஜூலை 25ந-ம் தேதி பொதுத்தோ்தலை நடத்த அதிபா் சம்மதம் தெரிவித்துள்ளார். மேலும் பாகிஸ்தானின் சிந்து, கையாபா், பலூசிஸ்தான் உள்ளிட்ட மாகாணங்களுக்கான அமைச்சரவை பதவிகாலமும் நாளையுடன் முடிவடைகிறது.



342 இடங்களை கொண்ட பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் மக்களவையில் 272 இடங்கள் பொது தொகுதிகளாகவும், 60 இடங்கள் மகளிர் மட்டும் போட்டியிடும் தொகுதிகளாகவும், 10 இடங்கள் சிறுபான்மை இனத்தவர்களுக்கான தொகுதிகளாகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது!