`காலா` பட விவகாரம்: ரஜினி-ரஞ்சித்துக்கு ஐகோர்ட் நோட்டீஸ்!
`காலா` திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் பா.ரஞ்சித்திக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது!
சென்னை: காலா திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜசேகரன் என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவில் அவர் குறிப்பிட்டு இருந்ததாவது... காலா படத்தின் கதை தன்னுடைய கதை எனவும், இந்த படத்தை தடை செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் தனது கதையின கரிகாலன் என்று ஏற்கனவே பதிவு செய்து உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். தனது கரைப்படியே காலா படம் திரைப்படமாக்கப்பட்டு இருப்பதாவும், மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனுவை கடந்த மாதம் விசாரித்த நீதிபதிகள், படத்தின் கதை திருடப்பட்டதற்கு எந்த விதமான ஆதாரமும் சமர்பிக்கப்படவில்லை, இதனால் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள முடியாது என தள்ளுபடி செய்தனர்.
இந்த உத்தரவை எதிர்த்து ராஜசேகரன் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் பார்த்திபன், ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிபதிகள் 'காலா' படத்தை வெளியிட தடைவிதிக்க முடியாது என்று தெரிவித்தனர்.
மேலும், இந்த மனு குறித்து நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ரஞ்சித், படத்தைத் தயாரித்த வுண்டர்பார் நிறுவனம் மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை ஆகியோர் வரும் ஜூன் மாதம் 14-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
முன்னதாக, இந்தப்படம் வரும் ஜூன் 7-ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளதையடுத்து, இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தினத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.