காமன்வெல்த் போட்டி தொடரின் 25 மீட்டர் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டுகோஸ்ட் நகரில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் மொத்தம் 71 நாடுகள் பங்கேற்கின்றன. 


பளுதூக்குதல், துப்பாக்கிச் சுடுதல், போன்ற போட்டிகளில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்களைக் குவித்து வருகின்றனர். முக்கியமாகத் துப்பாக்கி சுடுதலில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது.


இந்நிலையில், இன்று நடைபெற்ற பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் தேஜஸ்வானி தங்கம் வென்று அசத்தியுள்ளார். அதேபோன்று மற்றொரு வீராங்கனை அஞ்சு, வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.


இதையடுத்து, ஆடவருக்கான 25 மீட்டர் ரேபிட் ஃபயர் துப்பாக்கிசுடுதலில் இந்தியாவின் அனிஷ் பன்வாலா தங்க பதக்கம் வென்றார். 


தற்போது 16 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கல பதக்கங்களுடன் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. 159 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா முதல் இடத்திலும் 89 பதக்கங்களுடன் இங்கிலாந்து இரண்டாவது இடத்திலும் உள்ளது.