பண்டி மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் கடந்த டிசம்பர் மாதத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்திருக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜெய்ப்பூரிலிருந்து சுமார் 251 கி.மீ தூரத்தில் உள்ள கோட்டா நகரில் அரசு நடத்தும் JK Lone மருத்துவமனையில் கடைசி இரண்டு நாட்களில் குறைந்தது ஒன்பது குழந்தைகள் இறந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகள் சமீப காலமாக தொடர்ந்து உயிரிழப்பது அதிகரித்துள்ளது குறிப்பாக கோட்டாவில். 


கடந்த 34 நாட்களில் இதுவரை இந்த மருத்துவமனையில் 104 குழந்தைகள் இறந்துவிட்டதாகச் செய்திகள் சொல்கின்றன. ஆனால் இந்த 33 நாட்களாக ராஜஸ்தான் மாநில சுகாதார அமைச்சர் ரகு சர்மா, குழந்தைகளை பார்க்கவும், அவர்களின் பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறவும் மருத்துவமனைக்கு வரவில்லை என்பது வேதனையான நிகழ்வாக இருக்கிறது.


இந்த நிவையில் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தின் பண்டி மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் மட்டும் கடந்த டிசம்பர் மாதத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்திருக்கின்றன. அந்த மாவட்ட ஆட்சியர் நேற்று இந்த மருத்துவமனையில் ஆய்வு செய்தபோது, குழந்தைகளின் இறப்பு குறித்த எண்ணிக்கை தெரியவந்தது. மருத்துவ அலட்சியம் காரணமாக குழந்தைகள் உயிரிழந்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டு கூறப்படுகிறது.


ஆனால், இதனை மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது. ஏற்கனவே தீவிர நோய் பாதிப்பினால் சேர்க்கப்பட்ட குழந்தைகள், பல்வேறு காரணங்களால் இறந்திருப்பதாகவும், மருத்துவமனையின் பொறுப்பற்ற தன்மையால் அல்ல என்றும் மருத்துவமனை நிர்வாகம் கூறி உள்ளது.



உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.