கட்சித் தலைவர்கள் 100 பேரிடமிருந்து பறந்த கடிதம்.. அதிர்ச்சியில் காங்கிரஸ் தலைமை..!!!
காங்கிரஸ் கட்சி பொருத்தமான தலைமை இல்லாத காரணத்தினால், தேசிய அளவில் செல்வாக்கை இழந்து வருகிறது.
காங்கிரஸ் கட்சி பொருத்தமான தலைமை இல்லாத காரணத்தினால், தேசிய அளவில் செல்வாக்கை இழந்து வருகிறது.
2017 ஆம் ஆண்டு டிசம்பரில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றார். சென்ற நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் படு தோல்வியை சந்தித்தது. அதை அடுத்து அவர் ஜூலை மாதம் ராஜினாம செய்தார்.
அவரது ராஜினாமாவைத் தொடர்ந்து.. சோனியா காந்தி இடைக்கால தலைவராக, ஆகஸ்டில் பொறுப்பேற்றார். திருமதி சோனியா காந்தி, 1998 முதல் 2017 வரை தொடர்ந்து 17 ஆண்டுகளுக்கு தலைவராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் கட்சியில் கட்சிக்காக உழைப்பவர்கள் குறிப்பாக இளைஞர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படுவதில்லை என்ற குற்றசாட்டு, பல தரப்பிலிருந்து தொடர்ந்து வைக்கப்படுகின்றன.
தற்சமயம் மாநில அளவில் காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் மோதல்கள் வெடித்து வருகின்றன. மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் சேர்ந்த நிகழ்வை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க மாட்டோம். அதன் விளைவாக, அம்மாநிலத்தில், கம்லநாத் தலைமையிலான அரசு ஆட்சியை இழந்தது.
ALSO READ | இரட்டையர்களை மணந்த இரட்டையர்கள்: அதுல ஆச்சரியம் இல்லை…அதுல ஒரு ட்விஸ்ட்..!!!
கடந்த மாதம் ராஜஸ்தானிலும் முதல்வர் அஷோக் கெஹ்லாட்டிற்கு எதிராக, சச்சின் பைலட் தலைமையில், சிஅல் எம் எல் ஏக்கள் இணைந்து கிளர்ச்சி நடவடிக்கை மேற்கொண்டது நினைவிருக்கலாம்.
சில பல போராட்டங்களுக்கு பின், காங்கிரஸ் கட்சி சச்சின் பைலட்டை சமாதானப்படுத்தி, ராஜஸ்தானில் தனது ஆட்சியை காப்பாற்றிக் கொண்டது.
ALSO READ | Corona Vaccine: இந்தியாவில் எங்கே .. எப்போது... என்ன விலை...!!!
இந்நிலையில் தான் நேரு குடும்பத்தை விமர்சித்து ஒரு கட்டுரை எழுதியதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட அக்கட்சித் தலைவர் சேர்ந்த சஞ்சய் ஜா, கட்சியை சேர்ந்த சுமார் 100 தலைவர்கள் அதிருப்தியில் உள்ளதாகவும், அவர்கள் சோனியா காந்திக்கு கடிதம் எழுதி, கட்சித் தலைமையில் மாற்றம் வேண்டும் என்றும், காங்கிரஸ் செயற்குழுவில், இதற்கான வெளிப்படையாக தேர்தல் நடத்த வேண்டும் எனவும் எழுதியுள்ளதாக தனது ட்விட்டரில், பதிவு செய்துள்ளார்.