புதுடெல்லி: நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் இன்னுமும் உள்ளது. இதற்காக அரசு சார்பில் மாபெரும் தடுப்பூசி பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. இருப்பினும், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் செயல்முறை இன்னும் தொடங்கப்படவில்லை, ஆனால் இன்று (புதன்கிழமை) முதல் இந்தியாவில் 12 முதல் 14 வயது குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடத் தொடங்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம்
குழந்தைகளுக்கு  கொரோனா தடுப்பூசி போடுவது தொடர்பாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் செயலாளர் அனைத்து மாநில செயலாளர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதன்படி மார்ச் 16, 2022 முதல், 12-14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கோவிட்-19 தடுப்பூசி போடப்படும் என்று கூறப்பட்டது. மேலும் 12-13 மற்றும் 13-14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 'கோர்பேவாக்ஸ் தடுப்பூசி' மட்டுமே பயன்படுத்தப்படும்.


மேலும் படிக்க | CORBEVAX , COVOVAX தடுப்பு மருந்துகளுக்கு மத்திய அரசு அனுமதி..!!


ஆலோசித்த பிறகு முடிவு
விஞ்ஞானிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு, 12 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில், ஏற்கனவே நடந்து வரும் பிரச்சாரத்தின் கீழ் 15+ வயதினருக்கு தடுப்பூசி தொடர்ந்து பயன்படுத்தப்படும். 12-14 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி போடத் தொடங்க தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (என்.டி.ஜி.ஐ) பரிந்துரைத்தது.


வயது 12 ஆக இருக்க வேண்டும்
தடுப்பூசி போடுவதற்கு குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 12 வயது இருக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. தடுப்பூசி போடப்பட வேண்டிய குழந்தைகளுக்கு, அவர்களின் பிறந்த தேதி மார்ச் 16, 2010க்குப் பிறகு இருக்கக்கூடாது. அந்தத் தகவலின்படி, நாட்டில் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட 7.11 கோடி குழந்தைகள் உள்ளனர்.


பதிவு கட்டாயம்
தடுப்பூசி போடுவதற்கு முன் குழந்தைகளுக்கு பதிவு செய்வது கட்டாயமாகும். குழந்தைகள் கோவின் போர்ட்டலான www.cowin gov.in அல்லது ஆரோக்கிய சேது செயலியிலும் பதிவு செய்ய வேண்டும். ஒரு மொபைல் எண்ணில் 4 பேர் வரை பதிவு செய்யலாம். 15 வயதுக்கு மேற்பட்ட இளம் பருவத்தினரைப் போலவே, குழந்தைகளும் ஆன் த ஸ்பாட் பதிவு செய்யும் வசதியைப் பெறுவார்கள்.


28 நாட்களுக்குப் பிறகு இரண்டாவது தடுப்பூசி
இந்தக் குழந்தைகளுக்கு பயோலாஜிகல் இ. கம்பெனியின் கோர்பேவாக்ஸ் தடுப்பூசி போடப்படும். முதல் டோஸுக்குப் பிறகு, இரண்டாவது டோஸுக்கு 28 நாட்கள் இடைவெளி இருக்கும்.


முதியவர்களுக்கு மூன்றாவது டோஸ்
அதே நேரத்தில், மார்ச் 16 (இன்று) முதல், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதானவர்கள் அனைவரும் பூஸ்டர் அதாவது மூன்றாவது டோஸ் வழங்கப்படுகிறது.


மேலும் படிக்க | Biological-E தயாரிக்கும் Corbevax மற்ற தடுப்பூசிகளில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR