புது டெல்லி: கடந்த 48 மணி நேரத்தில், நாடு முழுவதும் சுமார் 1487 கோவிட் -19 வழக்குகள் பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதார நிறுவனம் மற்றும் குடும்ப நல அமைப்பு தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ. செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் 77 பேருக்கு புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளதால் மாநிலத்தில் மொத்த எண்ணிக்கையை 911 ஆகக் உயர்ந்துள்ளது.  அதேபோல கேரளாவில் 364 பேருக்கு  கொரோனா வைரஸ் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.


இதனால் இந்தியாவில் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த வழக்குகள் 6761 ஆக உயர்ந்து. இறப்பு எண்ணிக்கை 206 ஆக அதிகரித்துள்ளது. சுகாதார அமைச்சின் புள்ளிவிவரங்களின்படி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு மொத்தம் 6761 என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


கடந்த 24 மணி நேரத்தில் 896 புதிய வழக்குகள் என கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் இந்தியா முழுவதும் 1,487 பேருக்கு COVID-19 பாதிப்பு ஏற்பட்டு உள்ளது எனத் தகவல்.


மும்பையில் 212 பேர் கொரோனா வைரஸ்  பாதிப்பு இருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது. நகரத்தில் மொத்தம் 993 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருக்கிறது என்று பிஎம்சியை (Brihanmumbai Municipal Corporation) கூறியதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.