புதுடெல்லியில் 15 IPS அதிகாரிகளை இடமாற்றம் செய்து துணை நிலை ஆளுநர் அனில்பைஜால் உத்தரவிட்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக டெல்லியில் முதல்வர் அரவிந்த் கேஜிரிவால், தான் செயல்படுத்தும் திட்டங்களை மத்திய அரசு முடக்கி வருவதாகவும், மூன்று மாதங்களுக்கு முன், டெல்லி அரசின் தலைமைச் செயலாளரை ஆம்ஆத்மி MLA-க்கள் தாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டின் பெயரில், அமைச்சர்களுடன் IAS அதிகாரிகள் எவ்வித ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்கவில்லை எனவும், IAS அதிகாரிகள் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரம், கடந்த 9 நாட்களாக துணை நிலை ஆளுநர் மாளிகையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டார்.



9 நாள் போராட்டத்திற்கு பிறகு நேற்று மாலை அரவிந்த் கேஜிரிவால் தனது தர்ணா போராட்டத்தை முடித்துக் கொண்டதாக அறிவித்தார்.


இந்நிலையில் புதுடெல்லியில் பணிபுரிந்து வந்த 15 IPS அதிகாரிகள் கோவா, மிசோரம்,லட்சத்தீவு, அந்தமான் தீவு உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு இடமாற்றம் செய்துள்ளதாக துணை நிலை ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.