கேரள மாநிலத்தின் காசர்கோட் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்துக்கு காணாமல் போன 13 பேரும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்துவிட்டனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனையடுத்து போலீஸார் இது தொடர்பாக தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

13 பேரும் ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்துவிட்டதாக அவர்கள் உறவினர்களே தெரிவித்துள்ளனர். காணாமல் போனவர்களிடம் இருந்து அவர்களிடம் இருந்து அண்மையில் கிடைக்கப்பெற்ற குறுந்தகவலில்,  "எங்கள் இறுதி இலக்கை அடைந்துவிட்டோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் கூறினர். அவர்கள் 13 பேரும் துபாய் வாயிலாகவோ அல்லது இலங்கை வாயிலாகவோ ஐ.எஸ். ஆதிக்கம் உள்ள பகுதிக்கு சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.


இந்நிலையில் 13 பேர் மாயமானது, அவர்கள் ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்ததாக கூறப்படுவது உள்ளிட்ட தகவல்களில் நம்பகத்தன்மையை மத்திய, மாநில உளவு அமைப்புகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றன.


உளவுத் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, "காசர்கோடு மாவட்டத்தில் 13 பேரை காணவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்ட தகவலே. ஆனால், அவர்கள் ஐ.எஸ். தொடர்புடையவர்களா என்பது இன்னும் உறுதியாகவில்லை