ராஜஸ்தான் மாநிலம் போஹத்புரா பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சாலையில் சென்றுகொண்டிருந்த ட்ரக் தடம் புரண்டு அருகில் சென்ற 3 கார்களின் மீது விழுந்ததில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 


விபத்தில் காயமடைந்தவர்கள் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.


விபத்திற்கான காரணம் குறித்து தகவல்கள் இல்லை, இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை செய்து வருகின்றனர்!