அதிர்ச்சி! பிளஸ் 2 தேர்வு எழுதிக்கொண்டிருந்த மாணவன் உயிரிழப்பு!
தெலுங்கானாவில் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வு எழுதிக்கொண்டிருந்த மாணவன் மாராடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானாவில் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வு எழுதிக்கொண்டிருந்த மாணவன் மாராடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் செகந்தராபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், கோபி ராஜு என்ற மாணவ பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதுவதற்காக தேர்வு மையத்திற்கு வந்தார். வினாத்தாளை வாங்கி தேர்வு எழுதத்துவங்கிய அவர், சற்று நேரத்தில் திடீரென மயங்கி விழுந்தார்.
உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர். ஆனால், கோபியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். அவரது மரணத்திற்கு திடீர் மாரடைப்பே காரணம் எனவும் கூறினர். இந்த சம்பவம் சக மாணவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.