சீனாவிலிருந்து டெல்லி வந்துள்ள 17 பேருக்கு கொரோனா வைரஸ்?
சீனாவில் இருந்து டெல்லி வந்துள்ள 17 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக கண்டறியபட்டு உள்ளது.
சீனாவில் இருந்து டெல்லி வந்துள்ள 17 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக கண்டறியபட்டு உள்ளது.
சீனாவின் பரவி வரும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள வுஹான் நகரத்தில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. உலகம் முழுவதும் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 25-க்கும் அதிகமான நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது.
இந்த வைரஸ் வவ்வால்களை உணவாக உண்ணும் கட்டுவிரியன் பாம்புகள் மூலம் பரவியிருக்கலாம் என கருதப்பட்ட நிலையில் முதலில் எறும்பு தின்னியிடம் இருந்துதான் பரவியிருக்க வேண்டும் என தற்போது கண்டுபிடித்துள்ளனர்.
கொரோனா பாதிப்பிற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த 2002-2003 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சார்ஸ் வைரஸ் தாக்குதலில் 774 பேரைக் கொன்றது. சார்ஸ் வைரசால் பலியானோர் எண்ணிக்கையை விட கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி மேலும் 139 பலியாகியுள்ளனர். சீனாவில், கொரோனா வைரஸ் பாதிப்பால், இதுவரை சுமார் 1,523-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சீனாவில் இருந்து இந்தியா வந்த 17 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது இந்த 17 பேரும் தனிமைபடுத்தப்பட்டு தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தபட்டு இருப்பதாக சுகாதார துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.