தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களில் ஒரே நாளில் 1,008 பேர் டிஸ்சார்ஜ் செய்யபட்டுள்ளனர்..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் இன்று மேலும் 1,927 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36,841 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 326 ஆக உயர்ந்துள்ளது. 


இந்நிலையில், இது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில்.... தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,927 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 30 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவர். இந்நிலையில், மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 36,841 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 326 ஆக அதிகரித்துள்ளது. 


இன்றும், 1,392 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 25,937 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, செங்கல்பட்டில் 182 பேருக்கும், திருவள்ளூர் 105 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 33பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 77 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று ஒரே நாளில் 17,675 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்றைய தேதி வரையில் தமிழகத்தில் 6,38,846 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்று சென்னையில் 16 பேரும், செங்கல்பட்டில் 3 பேரும் என மொத்தம் 19 பேர் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 326 ஆக அதிகரித்துள்ளது. 


இன்றைய உயிரிழப்புகளில் 12 பேர் அரசு மருத்துவமனையிலும், 7 பேர் தனியார் மருத்துவமனையிலும் பலியாகியுள்ளனர். இன்று ஒரே நாளில் 1,008 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 19,333 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 17,179 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் மொத்த பாதிப்புகளில் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 1,933 பேரும், 13 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 30,850 பேரும், 60 வயதை கடந்தவர்கள் 4,085 பேரும் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


கொரோனா வைரஸ் தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தில் 77 மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் பரிசோதனை மையங்கள் உள்ளன. இதில் 44 அரசு மருத்துவமனையில் உள்ளது. 33 தனியார் மருத்துவமனையில் உள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link