1993-ம் வருடம் மும்பை மாநகரில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. மும்பையின் 12 முக்கிய இடங்களில் அடுத்தடுத்து இந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதன்காரணமாக 200-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பலியாகினர். சுமார் 700-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகக் கூறப்பட்டது.


இதில் மும்பையின் நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிமுக்கு தொடர்பு இருப்பது முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது. மேலும், அவனது கூட்டாளிகளான அபு சலீம், முஸ்தஃபா தோஸ்ஸா, கரிமுல்லா கான், ஃபெரோஸ் அப்துல் ரஷீத் கான், ரியாஸ் சித்திக், தாஹிர் மெர்சண்ட் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.


இந்தத் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் மும்பை தாதா தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகளான அபுசலீம் உள்ளிட்டோர் ஜுன் 16-ம் தேதி, 2017 அன்று குற்றவாளிகள் என தடா கோர்ட் உத்தரவிட்டது.


ஜுன் 28-ம் தேதி, 2017 மாரடைப்பு காரணமாக குற்றவாளிகளில் ஒருவரான முஸ்தஃபா தோஸ்ஸா உயிரிழந்தான். இதையடுத்து இவ்வழக்கு மீதான இறுதி விசாரணை ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி நடைபெற்றது.


இந்நிலையில், அபு சலீம் உள்ளிட்ட 5 பேர் மீதான இறுதி தண்டனை விவரத்தை இன்று அறிவிக்கப்பட்டது. அதில், 1993 மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளி கரிமுல்லா ஷேக்கிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு வைத்த கரிமுல்லா ஷேக்கிற்கு தடா சிறப்பு கோர்ட் ஆயுள் தண்டனை மற்றும் 2 லட்சம் அபராதமும் விதித்தது.


மேலும் அவனது கூட்டாளியான ரியாஸ் சித்திக்கிற்கு 10 வருடங்களும், ஃபெரோஸ் அப்துல் ரஷீத் கானுக்கு மரண தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.