Face Mask அணியாததால் 9 நாட்களில் 2000-க்கும் மேற்பட்ட Metro பயணிகளுக்கு அபராதம்
முகக்கவசம் அணியாதவர்கள் மெட்ரோ ரயில்களில் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தனி மனித இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் பல நெறிமுறைகளை கடுமையாக பின்பற்ற Delhi Metro பயணிகளுக்கு அறிவுறுத்தியது.
சுமார் 6 மாத இடைவெளிக்குப் பிறகு, டெல்லி மெட்ரோ, கடுமையான COVID-19 வழிகாட்டுதல்களுடன் தனது இயக்கத்தை செப்டம்பர் 7 ஆம் தேதி தொடக்கியது. முகக்கவசம் அணியாதவர்கள் மெட்ரோ ரயில்களில் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தனி மனித இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் பல நெறிமுறைகளை கடுமையாக பின்பற்ற Delhi Metro பயணிகளுக்கு அறிவுறுத்தியது.
இருப்பினும், 15 நாட்களுக்குள்ளேயே பலர் DMRC நெறிமுறைகளை பின்பற்றவில்லை என்பது தெரிய வரவே, DMRC நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் (DMRC) 9 நாட்களில் (செப்டம்பர் 11-20 முதல்) 2,214 பயணிகளுக்கு ஸ்டேஷன் வளாகத்திலும், ரயில்களிலும் முகக்கவசம் அணியாததற்காக அபராதம் விதித்துள்ளது.
டெல்லி மெட்ரோவின் செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு சட்டத்தின் பிரிவு 59 ன் கீழ், நிபந்தனைகளை மீறுபவர்களுக்கு பொது தொல்லைகளை உருவாக்கிய குற்றத்திற்காக 200 ரூபாய் அபராதம் விதிக்க முடியும்.
ALSO READ: மெட்ரோ பயணிகளின் கனிவான கவனத்திற்கு: உங்களை வரவேற்க காத்திருக்கிறது Chennai Metro!!
மேலும், DMRC குழுக்கள் 5,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளன. கொரோனா வைரஸின் (Corona Virus) பரவலைக் குறைப்பதற்கு, COVID-19 தொடர்பான நெறிமுறைகளைப் பற்றி அவர்களுக்கு உணர்த்தும் முயற்சியாக இது செய்யப்பட்டது.
மெட்ரோ நெட்வொர்க்கிற்குள் பயணிகள் எல்லா நேரங்களிலும் முகக்கவசங்களை (Face Mask) அணிந்துகொள்வதையும், தனி மனித இடைவெளி (Social Distancing) விதிமுறைகளுக்கு கட்டுப்படுவதையும் உறுதி செய்வதற்காக DMRC ஒரு சிறப்பு பறக்கும் அணியை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.
Yellow Line-ல் (சமாய்பூர் பத்லி-ஹுடா சிட்டி சென்டர்) அதிக எண்ணிக்கையிலான அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து Violet Line (காஷ்மீரி கேட்-ராஜா நஹர் சிங் பல்லப்கர்) மற்றும் Blue Line (துவாரகா செக் -21 முதல் நொய்டா எலக்ட்ரானிக் சிட்டி / வைஷாலி) உள்ளன.
வரையறுக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் மட்டுமே அபராதம் விதிக்கப்படுவதாக DMRC கூறியது. பயணிகள் கவுன்சிலிங்கிற்கு செவிசாய்க்காத போதும், முகக்கவசங்களை சரியாக அணிய அறிவுறுத்தப்பட்ட போதும், அதற்கு ஒப்புக்கொள்ளாமல் பிறருக்கு தொல்லைகள் கொடுத்த போதும் அபராதங்கள் விதிக்கப்பட்டதாக DMRC தெரிவிக்கின்றது.
ALSO READ: MGR Central-Tirupati உட்பட பல தனியார் ரயில் தடங்களுக்கு Southern Railways பரிந்துரை!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR