2019 மக்களவை தேர்தலில் பாஜக -ஜேடியு சம அளவில் போட்டி :அமித் ஷா
வரும் 2019 ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலில் பீகாரில் பா.ஜ.க மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமைத்து போட்டியிடும் என ஏற்கனவே தகவல்கள் வந்தது. ஆனால் தொகுதி பங்கீடு குறித்து எதுவும் கூறப்படவில்லை.
வரும் 2019 ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலில் பீகாரில் பா.ஜ.க மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமைத்து போட்டியிடும் என ஏற்கனவே தகவல்கள் வந்தது. ஆனால் தொகுதி பங்கீடு குறித்து எதுவும் கூறப்படவில்லை.
இந்நிலையில், இன்று பீகார் மாநிலத்தின் முதல் அமைச்சர் நிதிஷ்குமார் மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இருவரும் செய்தியாளர்களிடம், வரும் 2019 ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலில் பா.ஜ.க மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமைத்து போட்டியிடும். இரண்டு கட்சிகளும் சம அளவிலான தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. யாருக்கு எந்த தொகுதி என இன்னும் சில நாட்களில் முடிவு செய்யபப்டும் எனவும் கூறினார்கள்.
பீகாரில் மொத்தம் 40 மக்களவை இடங்கள் உள்ளன. கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதாதளம் தனித்து போட்டியிட்டனர். அதில் பாஜக 30 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியது. ஆனால் ஆறு இடங்களை மட்டும் வென்றது. அதேநேரத்தில் ஐக்கிய ஜனதாதளம் மொத்தம் 22 இடங்களை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது