நாட்டின் 21 முன்னாள் நீதிபதிகள் தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட்டுக்கு கடிதம்  ஒன்றை எழுதியுள்ளனர். நீதித்துறையின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை சிதைக்க முயற்சிகள் நடந்து வருகிறது என ஓய்வு பெற்ற 21 நீதிபதிகள் குழு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூடுக்கு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகளான தினேஷ் மகேஸ்வரி, கிருஷ்ணா முராரி, எம் ஆர் ஷா மற்றும் பல்வேறு உயர் நீதிமன்றங்களில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் குழு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டிற்கு, இந்த  கடிதத்தை எழுதியுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிய 21 நீதிபதிகளில் 17 முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகளும், 4 முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் அடங்குவர். தவறான தகவல்களைப் பரப்பி நீதித்துறையை பலவீனப்படுத்த சிலர் முயற்சிப்பதாகவும், அழுத்தம் கொடுப்பதாகவும் தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு எழுதியுள்ள கடிதத்தில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். தமது அரசியல் இலாபங்களுக்காக இவ்வாறு அழுத்தம் கொடுக்கப்படுகிறது என்றும், இதனால் நீதிமன்றத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது எனறும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகளின் நேர்மை மீது சந்தேகங்களை எழுப்புவதன் மூலம் நீதித்துறை செயல்முறைகளை திசைதிருப்ப, நயவஞ்சகமான முறைகளை விமர்சகர்கள் பின்பற்றுகின்றனர். இத்தகைய செயல்கள் நமது நீதித்துறையின் புனிதத்தை அவமதிப்பதோடு மட்டுமின்றி, சட்டத்தின் பாதுகாவலர்களாகிய நீதிபதிகள் உறுதிமொழி எடுத்துள்ள நேர்மை மற்றும் பாரபட்சமற்ற கொள்கைகளுக்கு நேரடி சவால் அளிப்பதாகவும் உள்ளது எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.



நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகளின் மீது அவதூறான கருத்துக்களை தெரிவிப்பதன் மூலம் நீதித்துறை செயல்முறைகளை கொச்சைப்படுத்தும் நயவஞ்சகமான முயற்சிகள் சில குறிப்பிட்ட குழுவினரால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பாக, சமூக பொருளாதார அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் நீதிமன்றங்கள் கையாளும் போது, நீதித்துறையின் சுதந்திரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சில குழுவின் நடவடிக்கை அதிகரிக்கிறது என்றும் கடிதத்தில் குறிப்பிடுள்ளனர்.


மேலும் படிக்க | எடப்பாடி பழனிசாமி பிரதமராக வாய்ப்பு உள்ளது - பிரேமலதா விஜயகாந்த்!


நீதித்துறைக்கு எதிராக மக்களின் உணர்வுகளை தூண்ட முயற்சி


நீதித்துறைக்கு எதிரான தவறான தகவல்களை பரப்பி,  மற்றும் மக்களின் உணர்வுகள் குறித்து நாங்கள் குறிப்பாக அக்கறை கொண்டுள்ளோம். இது நெறிமுறையற்றது மட்டுமல்ல, நமது ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கும் தீங்கானது. 21 ஓய்வுபெற்ற நீதிபதிகள் சார்பில் தலைமை நீதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில், நீதித்துறை முடிவுகளை தேர்ந்தெடுத்து பாராட்டும் வழக்கம் ஒருவரின் கருத்துக்கு ஏற்ப உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளனர்.


வெளிப்புற அழுத்தங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தின் தலைமையிலான நீதித்துறை வலுப்பெற வேண்டும் என்றும், சட்ட அமைப்பின் புனிதம் மற்றும் சுயாட்சி பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்திய ஓய்வு பெற்ற நீதிபதிகள், நீதித்துறையானது "ஜனநாயகத்தின் தூணாக, விருப்பு வெறுப்புகளுக்கு ஆளாகாமல் இருக்க வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.


மேலும் படிக்க | விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நடிகர் விஜய் கட்சி போட்டி? - வந்தது ரகசிய உத்தரவு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ