சட்டீஸ்கரில் நக்சல் தாக்குதல்: 26 சிஆர்பிஎப் வீரர்கள் பலி

சத்தீஷ்காரில் நக்சல் தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த சுக்மாவில் பாதுகாப்பு படையினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே சண்டை வெடித்து உள்ளது.
சண்டையில் 26 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர் எனவும் 20 பேர் காயம் அடைந்து உள்ளனர் எனவும் தெரியவந்து உள்ளது. காயம் அடைந்த வீரர்கள் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் சண்டை நடந்த பகுதியில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டு ராய்பூர் மற்றும் ஜாக்தால்பூர் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். இதுவரையில் இரண்டு பேரது சடலம் மீட்கப்பட்டு உள்ளது என மத்திய உள்துறை அமைச்சக தகவல்கள் தெரிவித்து உள்ளன.
இந்த சம்பவத்தை தொடர்ந்து முதல்வர் ராமன்சிங் தலைமையில் உயர்மட்ட அதிகாரிகள் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர்.