Corona Update: இந்தியாவில் 27 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது
நேற்று 19,02,009 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது
இந்தியாவில் நேற்று 19.02- லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் சற்று மட்டுப்பட்டுவிட்டது. முதல் அலையை விட இரண்டாவது அலை மிகவும் வீரியமாக இருந்தததால், பரவலும் துரிதமாக இருந்தது. உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது தணியத் தொடங்கியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பைக் கண்டறிய நாளொன்றுக்கு ஏறத்தாழ 19 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன.
நேற்று 19,02,009 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இதுவரை மொத்தம் 38 கோடியே 92 லட்சத்து 07 ஆயிரத்து 637- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.எம்.சி.ஆர் கூறுகிறது. நாட்டில் இதுவரை 27 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
Read Also: கொரோனா மூன்றாவது அலையிலிருந்து பாதுகாக்கும் உணவுகள்
கடந்த 24 மணி நேரத்தில் 33 லட்சத்திற்கும் (33,00,085) அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டதாக ஐ.எம்.சி.ஆர் தெரிவித்துள்ளது. இதனால், 27 கோடி டோஸ் தடுப்பூசிகள் என்ற மிகப்பெரிய எண்ணிக்கையை இந்திய கடந்துள்ளது. இதுவரை இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 27,23,88,783 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 97 ஆயிரத்திற்கும் மேற்பட்ட (97,743) நோயாளிகள் கோவிட்டில் இருந்து குணமானார்கள். பதிவு செய்தது.
Read Also | Effect of Third Wave: மூன்றாவது அலை; குழந்தைகளை எவ்வாறு பாதிக்கும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR