நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் வீரியம் குறைந்து வருகிறது. இதனால் பல இடங்களில் ஊரடங்குத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. இந்தச் சூழலில் கொரோனா மூன்றாம் அலையின் வருகை பற்றிச் செய்திகள் பரவி வருகின்றனர். முதல் அலை முதியவர்களையும் இரண்டாம் அலை இளைஞர்களையும் பாதித்ததுபோல மூன்றாம் அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கலாம் என்று செய்திகள் கிளம்பியிருக்கின்றன.
இந்நிலையில் மூன்றாவது அலை (Third Wave) குழந்தைகளை அதிகம் தாக்கும் என்று ஊகிக்கப்படுகிறது. இது பெற்றோர்களிடையே பெரும் பீதியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதன்படி மூன்றாவது அலையில் குழந்தைகளில் COVID-19 இன் அறிகுறிகள் என்னவென்று பார்போம்:
ALSO READ | COVID-19 in children: குழந்தைகளுக்கு எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும்
* குழந்தைகள் அதிக காய்ச்சல், குளிர், மூச்சு திணறல், இருமல், வாசனை இழப்பு, தொண்டை வலி, சோர்வு, தசை வலி, மற்றும் சளி போன்ற அறிகுறிகள் ஏற்படக்கூடலாம்.
*சில குழந்தைகளுக்கு எந்த அறிகுறிகளையும் ஏற்படாமல் இருக்கலாம்.
நீங்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள்
1. COVID-19ன் அறிகுறிகள் தோன்றியவுடன், உங்கள் குழந்தையை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தவும். வைரஸ் இருப்பதை சோதித்து ஆக்ஸிஜன் அளவை கண்காணிக்கவும்.
2. கொரோனா பாசிட்டிவ் என முடிவு வந்தால், குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் மற்றும் செல்லப்பிராணிகளிடமிருந்து அவர்களை தனியாக வைக்கவும்.
3. கைக்குழந்தையாக இருந்தால், குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் எல்லா நேரத்திலும் முககவசம் அணிந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
4. ஒவ்வொரு முறை குளித்த பின்னரும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யவும்.
5. ஆரோக்கியமான சுகாதாரப் பழக்கங்களைப் பின்பற்ற குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் அறிவுரை கூறுங்கள்.
கொரோனா வைரஸின் மூன்றாவது அலை பற்றி கவலைப்பட வேண்டாம் என்று நாட்டின் சிறந்த குழந்தைகள் நிபுணர்கள் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் உங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது முக்கியம் என்றும் அவர்கள் தெளிவுப்படுத்தியுள்ளார்.
ALSO READ | DRDO 2-DG மருந்து அனைத்து கொரோனா திரிபுகளிலும் செயலாற்றுகிறது: ஆய்வு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR