புதுடெல்லியில், இரண்டு கொள்ளை கும்பளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் பலியாகியுள்ளனர், 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதுடெல்லி சனட் நகரில் இன்று காலை 10.15 மணியளவில் பிரபல ரவுடி கும்பள்களான கோகி குழு மற்றும் தில்லு குழு ஆகிய இரண்டு குழுவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த தாக்குதலில் 3 பேர் பலியாகியுள்ளனர் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்த இரண்டு குழுவினை சேர்ந்த உறுப்பினர்களும் ஸ்கார்ப்பியோ மற்றும் பார்ட்யுனர் வாகனங்களில் பயணித்து ஒருவரை ஒருவர் சுட்டுத் தாக்கிக்கொண்டதாகவு தகவல்கள் தெரிவிக்கின்றன. 



இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கையில்... இரண்டு குழு உறுப்பினர்களும் வழக்கமாக வரும் உடற்பயிற்சி கூடத்தின் அருகில் இந்த துப்பாக்கிச்சூடு நடைப்பெற்றுள்ளது. இரண்டு குழுக்களும் தங்களது வாகனங்களில் துப்பாக்கிகளுடன் சென்று சண்டையிட்டுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



இந்த தாக்குதலில்., தில்லு குழுவை சேர்ந்த ராஜூ என்பவர் சுட்டுக்கொல்லப் பட்டுள்ளளார். மேலும் இருவரும் சம்பவயிடத்தில் உயிர்யிழந்துள்ளதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.