ஆக்ரா-லக்னோ அதிவேக நெடுஞ்சாலையில் 45 பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் கவிழ்ந்ததில் 30 பேர் காயமடைந்தனர்..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தரப்பிரதேசத்தில் ஆக்ரா-லக்னோ அதிவேக நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 20) காலை 45 பயணிகளைக் கொண்ட பேருந்து கவிழ்ந்ததில் 30 பேர் காயமடைந்தனர். இருப்பினும், இந்த விபத்தில் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.


அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்து கவிழ்ந்த போது டெல்லியில் இருந்து பீகாரின் மதுபானிக்கு பஸ் சென்று கொண்டிருந்ததாக SSP எட்டாவா ஆகாஷ் தோமர் செய்தி நிறுவனமான ANI-யிடம் தெரிவித்தார். ஆக்ரா-லக்னோ அதிவேக நெடுஞ்சாலையில் பஸ் சமநிலையை இழந்து கவிழ்ந்திருக்கலாம் என்று எஸ்எஸ்பி மேலும் கூறினார்.


காயமடைந்த பயணிகள் எட்டாவாவில் உள்ள PGI சைபாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர் 14 பயணிகள் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும், 16 பேர் PGI-யில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.