வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 3000 பேர் காணாமல் போயிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீண்ட காலமாக, வடகிழக்கின் எட்டு மாநிலங்களில், அன்புக்குரியவர்களிடமிருந்து பிரிந்து செல்வதற்கான பிரச்சனை அதிகரித்து வருகிறது. மத்திய அரசின் கூற்றுப்படி, 2015 மற்றும் 2017-க்கு இடையில், இந்த எட்டு மாநிலங்களில் இருந்து சுமார் 28,000 பேர் காணாமல் போயுள்ளனர், இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமான சராசரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.


இத்தகவலை உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி புதன்கிழமை மாநிலங்களவையில் வழங்கினார். குறித்து வடகிழக்கின் இந்த எட்டு மாநிலங்களில் மொத்தம் 27,967 பேர் காணாமல் போயுள்ளதாக அவர் எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்துள்ளார். 


இவர்களில் அசாமில் இருந்து மட்டும் 19,344 பேர். இந்த காலகட்டத்தில் 5,130 பேரைக் கண்டுபிடிப்பதில் வெற்றி கிடைத்துள்ளது என்றும் மத்திய அமைச்சர் கூறினார்.


கிடைத்த தகவல்களின்படி, திரிபுராவில் இருந்து 4,455 பேரும், மேகாலயாவிலிருந்து 1385 பேரும், மணிப்பூரிலிருந்து 999 பேரும், சிக்கிமிலிருந்து 974 பேரும், அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்தவர்களும் 457 பேரும், நாகாலாந்தில் இருந்து 343 பேரும், மிசோரத்தைச் சேர்ந்தவர்களும் 10 பேர் காணாமல் போயுள்ளனர். 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டிற்கான தகவல்கள் இன்னும் இறுதிப்படுத்தப் படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


அசாமில் இருந்து அதிகம் காணாமல் போனவர்கள்: அசாமில் இருந்து காணாமல் போனவர்களில் அதிகமான குழந்தைகள் மற்றும் பெண்கள் இடம்பெற்றுள்ளனர் என்று கூறப்படுகிறது. 2015-ஆம் ஆண்டில், 2169 குழந்தைகள், 2613 பெண்கள் மற்றும் 1528 ஆண்கள் இந்த மாநிலத்தில் இருந்து காணாமல் போயுள்ளனர். அடுத்த ஆண்டு, 2413 குழந்தைகள், 3439 பெண்கள் மற்றும் 2130 ஆண்கள் காணாமல் போயுள்ளனர். 2017-ல் 1651 குழந்தைகள், 2453 பெண்கள் மற்றும் 948 ஆண்கள் காணாமல் போயுள்ளனர். 


மிசோரமில் மூன்று ஆண்டுகளில் 10 பேர் மட்டுமே காணாமல் போயிருப்பதாக தகவல்கள் காட்டுகின்றன. ஆதாவது மிசோரத்தின் நிலைமை அசாமில் இருந்து குறைவாகவே உள்ளது என்பதை நாம் இதன் மூலம் அறியலாம். மேலும் 2017-ஆம் ஆண்டில், ஒரு குழந்தை மட்டுமே காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், 2015 ஆம் ஆண்டில், மூன்று குழந்தைகள், ஒரு பெண் மற்றும் ஐந்து ஆண்கள் மட்டுமே காணாமல் போயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.