4,500 ஏர் இந்தியா ஊழியர்கள் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பம்!
பிரபல ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்கள் சுமார் 4500 பேர் விருப்ப ஓய்வு எனப்படும் விஆர்எஸ் பெற விண்ணப்பித்துள்ளனர்.
ஜே.ஆர்.டி.டாடா-வால் 1939ஆம் வருடம் டாடா ஏர் சர்வீசஸ் என்ற பெயரில் ஏர் இந்தியா நிறுவனம் தொடங்கப்பட்டது. பின்னர் சில வருடங்களில் டாடா ஏர்லைன்ஸ் என பெயர் மாற்றப்பட்டு இயங்கி வந்தது. இந்நிலையில், கடந்த 1953ஆம் வருடம் ஏர் இந்தியா நிறுவனத்தை மத்திய அரசானது நாட்டுடைமை ஆக்கியது.
அதன் பின்னர் பல ஆண்டுகளாக நஷ்டத்தையே கண்டு வந்த ஏர் இந்தியா நிறுவனம், கடந்த 2 ஆண்டுகளில் கொரோனா ஊரடங்கு காரணமாக முடக்கத்தை கண்டது.
இவ்வாறு மிகவும் மோசமான நிதி நிலையில் தத்தளித்த ஏர் இந்தியா நிறுவனத்தை மத்திய அரசு மீண்டும் தனியாரிடம் ஒப்படைக்க திட்டமிட்டது. பின்னர் ஏலமும் விடப்பட்டது. அப்போது அதிக விலை தந்து டாடா குழுமத்தின் டாலேஸ் பிரைவேட் லிமிடெட் (Talace Private Limited) நிறுவனம் ஏர் இந்தியாவை வாங்க தயாராக இருந்தது.
மேலும் படிக்க | முடிவுக்கு வந்தது நயன்தாரா- NETFLIX விவகாரம்! - வெளியானது லேட்டஸ்ட் அப்டேட்!
இதையடுத்து 69 வருடங்களுக்குப் பின்னர் ஏர் இந்தியா தனது தாய் நிறுவனமான டாடா குழுமத்திடமே ஒப்படைக்கப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபரில் இந்த கைமாற்றம் நிகழ்ந்த நிலையில், 2022 ஜனவரி 27ஆம் தேதி டாடா குழுமம் அதிகாரப்பூர்வமாக ஏர் இந்தியாவை தன் வசம் தக்கவைத்துக்கொண்டதை அறிவித்தது.
இதையடுத்து ஏர் இந்தியா நிறுவனத்தில் நிர்வாக விதிமுறைகள் பல மாற்றமடைந்தன. டாடா நிறுவனத்தின் முக்கிய தாரக மந்திரமான இளைய சமூகத்தினருக்கு வாய்ப்பு வழங்கவேண்டும் என்ற கொள்கை ஏர் இந்தியாவிலும் தலை தூக்கத்தொடங்கியுள்ளது.
ஏர் இந்தியா நிர்வாகம் கைமாற்றம் அடைந்த நேரத்தில் ஏர் இந்தியாவில் 13,000 ஊழியர்கள் இருந்தனர். அதில் 8,000 பேர் நிரந்தர பணியாளர்கள், மீதியுள்ளவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்தனர்.
இந்நிலையில், அடுத்த 2 ஆண்டுகளில் சுமார் 4000 பேர் ஓய்வு பெறவுள்ளனர். இந்நேரத்தில் டாடா குழும நிர்வாகம் ஏர் இந்தியாவின் விருப்ப ஓய்வு பெறுவதற்கான வயது வரம்பை மாற்றி அமைத்துள்ளனர்.
முன்னதாக 55 வயதில் தான் விஆர்எஸ் பெற முடியும் என்ற நிறுவன விதியை சற்று தளர்த்தி 40 வயதிலேயே விஆர்எஸ் பெற தகுதி உண்டு என்ற புதுப்பிப்பை அறிவித்தது. மேலும், இந்த வயது வரம்பு தளர்வை மேலும் மேம்படுத்தி 20 ஆண்டுகள் பணியை நிறைவு செய்தவர்களும் இந்த விஆர்எஸ் பெறும் தகுதி உள்ளவர்களாக கருதப்படுகின்றனர்.
மேலும் இந்த ஆண்டுக்கான விண்ணப்பத்தை ஜூலை 31 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்ற நிபந்தனை இருப்பதால், சுமார் 4,500 பேர் விருப்ப ஓய்வுக்காக விண்ணப்பித்துள்ளனர். இதனால் ஏர் இந்தியா நிறுவனம் அதிக அளவில் இளைஞர்களை இந்த வருடம் முதல் பணி அமர்த்த வாய்ப்பு உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இளைஞர்களை பயிற்சியளித்து பணியமர்த்தும் டாடா நிறுவனம் அடுத்த சில ஆண்டுகளில் புதுப்போலிவுடனான ஏர் இந்தியாவை மறு உருவாக்கம் செய்து நிறுத்தும் என எதிர்பர்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | அருள்நிதி நடித்த தேஜாவு படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ