30 நாட்களில் 49 சிசுக்கள் மரணம்- அடுத்த அதிர்ச்சி சம்பவம்!
கோரக்பூர் மருத்துவமனையில் குழந்தைகள் உயிரிழந்த அதிர்ச்சியை அடுத்து, ஃபருகாபாத் மருத்துவமனையில் கடந்த 30 நாட்களில் 49 குழந்தைகள் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தப்பிரதேசம் மாநிலம் ஃபருகாபாத் மாவட்டத்தில் உள்ள ராம் மனோகர் லோகியா ராஜ்கியா சிகிட்சாலே மருத்துவமனையில் கடந்த 30 நாட்களில் 49 குழந்தைகள் உயிரிழந்துள்ளது.
கடந்த ஜூலை 20-ம் தேதி முதல் ஆகஸ்ட் 21-ம் தேதி வரை ஆக்ஸிஜன் மற்றும் மருந்துகளின் பற்றாக்குறை காரணமாக 49 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து தலைமை மருத்துவ அதிகாரி, தலைமை மருத்துவ கண்காணிப்பாளர், மருத்துவர்கள் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.