மும்பை: என்சிபிக்கு எதிராக கலகம் செய்து, அஜித் பவாரை ஆதரித்து, ஆளும் பாஜக-சிவசேனா கூட்டணியில் இணைந்த பிரபுல் படேல், 'ஜி 24 தாஸ்' செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், சிவசேனாவுடன் என்சிபி ஆட்சி அமைக்க முடியுமானால், ஏன் பாஜகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கக்கூடாது என்று கேள்வி எழுப்புகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதுமட்டுமல்ல, என்சிபியின் 51 எம்எல்ஏக்கள் 2022 ஆம் ஆண்டிலேயே மகாராஷ்டிர அரசில் சேர விரும்பியதாக தெரிவித்த பிரஃபுல் படேலின் கூற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மகாராஷ்டிரா அரசியலில் நிலைமை எதிர்பாராத வகையில் மாறியுள்ள நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தலைவர் பிரபுல் படேல் பெரும் கோரிக்கையை முன்வைத்துள்ளார். கடந்த ஆண்டு மகாராஷ்டிராவில், அரசு கவிழ்ந்த பிறகு, கட்சியின் 53 எம்எல்ஏக்களில் 51 பேர் பாரதிய ஜனதா கட்சியுடன் (பாஜக) கைகோர்க்குமாறு கட்சித் தலைவர் சரத் பவாரிடம் கேட்டுக் கொண்டதாக அவர் கூறினார். பிரஃபுல் படேலின் கூற்றுப்படி, 2022 இல் பாஜகவுடன் கைகோர்க்க என்சிபியின் 51 எம்எல்ஏக்கள் தயாராக இருந்தனர்.


மேலும் படிக்க | பாஜக போட்ட பக்கா பிளான்... திடீர் துணை முதல்வரானார் அஜித் பவார் - என்ன நடக்கிறது மகாராஷ்டிராவில்?


சமீப நாட்களாகவே தேசியவாத காங்கிரஸ் கட்சியில் குழப்பமான சூழ்நிலை நிலவியது. அஜித் பவார் கலகம் செய்யப்போவதாக பேச்சுகள் அடிபட்டன. இதற்கிடையில் சரத் பவார் தலைவர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்து, அதை திரும்பப்பெற்றார். அப்போதே கட்சியை அஜித் பவார் கைப்பறி விட்டதாகத் தகவல்கள் வெளிவந்தன.


சரத் பவாரின் தலைமுறையில் அவரது குடும்பத்திலிருந்து வேறு யாரும் அரசியலுக்கு வரவில்லை. அவரது அண்ணன் மகன் அஜித் பவார் தான் அரசியலுக்கு வந்தவர். 
ஆனால்,  சரத் பவாரின் மகள் சுப்ரியா சூலே அரசியலுக்கு வந்தபோது, நிலைமை முற்றிலுமாக மாறியதாக அரசியல் விமர்சகர்கள்



குறிப்பிடத்தக்க வகையில், ஞாயிற்றுக்கிழமை, மூத்த என்சிபி தலைவர் அஜித் பவார் கட்சியில் இருந்து பிரிந்து பாஜக கூட்டணியில் சேர்ந்து துணை முதல்வராக பதவியேற்றார். அவரைத் தவிர, சகன் புஜ்பால், ஹசன் முஷ்ரிப் உள்ளிட்ட கட்சியின் 8 எம்எல்ஏக்களும் அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவியேற்றனர்.


ஷிண்டேவின் கிளர்ச்சியால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மாநிலத்தில் சிவசேனா, என்சிபி மற்றும் காங்கிரஸ் அரசு வீழ்ச்சியடைந்தது. பின்னர் பாஜக ஆதரவுடன் ஷிண்டே முதல்வரானார். அந்த சந்தர்ப்பத்தில், பாஜக கூட்டணியில் சேருவது குறித்து என்சிபியில் ஆலோசிக்கப்பட்டதாக பிரபுல் படேல் கூறினார். இதுகுறித்து எம்எல்ஏக்கள் விருப்பம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.


மேலும் படிக்க | டீஸ்டா செடல்வாட்டுக்கு 7 நாட்கள் கால அவகாசம் வழங்கியது SC: பின்னணி என்ன?


“இந்தப் பிரச்சினை விவாதிக்கப்பட்டது ஆனால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இப்போது அது வடிவம் பெற்றுள்ளது. ஒரு கட்சியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது, அது என்னுடையதோ அல்லது அஜித் பவாரின் விருப்பம் அல்ல"  என்று படே தெரிவித்தார். சரத் பவார் பாஜக கூட்டணி அரசில் சேர வேண்டும் என்று அப்போது விரும்பிய 51 எம்எல்ஏக்களில் ஜெயந்த் பாட்டீலும் ஒருவர் என்றும் அவர் கூறினார்.


அனில் தேஷ்முக்கும், நவாப் மாலிக்கும் மட்டும் இந்த விவாதத்தில் ஈடுபடவில்லை என்றார். படேல், “என்சிபி அமைச்சர்கள் சரத் பவாருக்கு கட்சி ஆட்சியில் இருந்து விலகி இருக்கக் கூடாது என்று கடிதம் எழுதியுள்ளனர். அரசாங்கத்துடன் இணைவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதில் எந்தத் தீங்கும் இல்லை” என்றார்.


மேலும் படிக்க | பவரை இழந்த பவார்... சின்னத்தை கோரும் அஜித் பவார்... சிக்கலில் சரத் பவார்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ