சபரிமலையில் முன்பதிவு செய்துள்ள 560 பெண் பக்தர்களை கோவிலுக்கு அழைத்துச் செல்ல ஹெலிகாப்டர்..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மாநிலம் முழுவதும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது. பம்பை, நிலக்கல்மற்றும் சன்னிதானப் பகுதிகளில் பக்தர்கள் நின்று கொண்டு ,ஐயப்பனை தரிசிக்க வரும் பெண்களை தடுத்து நிறுத்தினர். இதில் போராட்டக்காரர்களும், கோயிலுக்கு செல்ல முயன்ற பெண் பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர். 


இதையடுத்து, பத்து வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை சபரிமலையில் நுழைய விடாமல் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருவதால் மலைக்கு செல்ல முடியாமல் நிலக்கல்லில்லும் பம்பாவிலும் பல பெண் பக்தர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். மலைப்பாதையில் போராட்டக்காரர்கள் பக்தர்கள் போல் திரண்டு விடுவதால் போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை. 


இந்நிலையில், சமீபத்தில் சபரிமலைக்கு செல்வதற்காக ஆன்லைன் முன்பதிவு துவங்கியது. சபரிமலைக்கு செல்ல ஆன்லைன் முன்பதிவு செய்துள்ளனர் பக்தர்களில் சுமார் 560 பெண் பக்தர் பதிவு செய்துள்ளனதாக தகவல் தெரிவித்துள்ளனர். பெண் பக்தர்களை மலைக்கு அழைத்துச் செல்ல கேதர்நாத், வைஷ்ணவதேவி கோவில்களில் பயன்படுத்தப்படுவதைப் போல், ஹெலிகாப்டர்களை இயக்க உள்ளதாக கேரள அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மண்டலம் மகரவிளக்குப் பூஜைக்காக வரும் 17 ஆம் தேதி முதல் 41 நாட்களுக்கு சபரிமலை நடை திறக்கப்பட உள்ளது.