உலகின் முன்னணி ஆன்லைன் விற்பனை நிறுவனமான அமேசான், வர்த்தக வளர்ச்சியை மையமாக கொண்டு இந்தியாவில் பணிபுரியும் தனது ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நிறுவனத்தின் வர்தக வளர்ச்சியை மையமாக வைத்துப் பல முக்கிய நடவடிக்கைகளை ஆண்டுதோறும் எடுத்து வருகிறது அமேசான். இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியா இந்தியாவில் பணிபுரியும் தன் ஊழியர்கள் 60 பேரினை பணியில் இருந்து நீக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


கடந்த வாரம் இந்தியாவில் இருக்கும் ஆட்சேர்ப்பு பிரிவு அதிகாரிகளில் இருந்து இந்த நீக்கம் நிகழ்ந்துள்ளது என தெரிகிறது. இதுமட்டும் அல்லாமல் இன்னும் பல அணிகளில் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த வருடத்தை விட இந்த ஆண்டு அமேசான் நிறுவனம் சுமார் 25% அதிக ஊழியர்களைத் திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் சேர்த்துள்ளது. இதனால் பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களின் எண்ணிக்கையும் வாய்ப்புகள் அதிகாமாக உள்ளதாக தெரிகிறது.


அதேப்போல் அமெரிக்காவின் சியாடில் பகுதியில் இருக்கும் அமேசன் தலைமை அலுவலகத்தில் இருந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படலாம் என அந்நிறுவன ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது!