7th Pay Commission ஏப்ரல் முதல் 25% DA: DR, அரியர் தொகை அனைத்தும் சேர்ந்து வரக்கூடும்
மத்திய அரசின் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் DA உயர்வுடன் ஒத்ததாக இருக்கும். இது இனிமேல்தான் மத்திய அரசால் அறிவிக்கப்பட உள்ளது.
7th Pay Commission latest news today: ஜனவரி 2021 முதல் வரவேண்டிய அகவிலைப்படி (DA) பற்றிய அறிவிப்புக்காக சுமார் 52 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த பட்டியலில், சுமார் 60 லட்சம் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்களும் (CGS) உள்ளனர். அவர்களின் அகவிலை நிவாரணம் (DR) மத்திய அரசின் DA உயர்வு அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் DA உயர்வுடன் ஒத்ததாக இருக்கும். இது இனிமேல்தான் மத்திய அரசால் அறிவிக்கப்பட உள்ளது.
DA உயர்வு அறிவிப்பைத் தவிர, மத்திய அரசு ஊழியர்கள் (Central Government Employees) மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் இருவரும் முறையே DA ரெஸ்டொரேஷன் மற்றும் DR ரெஸ்டொரேஷன் ஆகியவற்றுக்காக காத்திருக்கிறார்கள். ஏனெனில், ஹோலி பண்டிகைக்கு முன்னதாக DA உயர்வை அறிவிக்கும் போது DA மற்றும் DR ரிஸ்டோரேஷன் குறித்தும் மத்திய அரசு அறிவிக்கக்கூடும் என ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்படி நடந்தால், மத்திய அரசு ஊழியர்களின் DA 8 சதவீதம் உயரும். ஏப்ரல் 2021 முதல் அவர்களது DA, அவர்களது அடிப்படை சம்பளத்தில் 25 சதவீதம் (17 + 4+ 4) ஆக மாறும். இருப்பினும், மத்திய அரசு ஊழியர்கள் குறித்த இந்த தகவலைப் பற்றி இன்னும் மத்திய அரசு எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை.
DA உயர்வு கணக்கீடு
சமீபத்திய அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு (AICPI) தரவுகளின் அடிப்படையில், ஏ.ஜி. பிரதர்ஹுட்டின் பிரயாகராஜைச் சேர்ந்த ஹரிஷங்கர் திவாரி, டிசம்பர் AICPI எண் 342 ஆக இருப்பதால், ஜனவரி 2021 முதல் நிலுவையில் உள்ள DA உயர்வு 4 சதவீதத்திற்கு குறைவாக இருக்காது என கூறினார். 2020 ஜூலை மற்றும் டிசம்பர் வரையிலான காலத்தின் AICPI எண் 335 bps அதாவது 3.35 சதவீதமாக இருந்தது. DA உயர்வு விதியில் உள்ளது போல், அறிவிக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச DA அடுத்த மொத்த ஃபிகரான 4.0 ஆக இருக்கும். மத்திய அரசு ஊழியர்களால் ஜனவரி முதல் ஜூன் 2021 வரையிலான காலப்பகுதியில் குறைந்தபட்சம் 4 சதவீத DA உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது.
ALSO READ: 7th Pay Commission எச்சரிக்கை: இந்த சின்ன தவறால் LTC claim-ஐ பெற முடியாமல் போகலாம்
DA சேர்த்து வழங்கப்படுவது (DA Restoration)
ஜனவரி 2021 முதலான DA உயர்வை அறிவிக்கும் போது DA நிலுவைத் தொகை சேர்த்து வழங்கப்படும் என்று ஊடகங்கள் கூறி வருகின்றன. அப்படி நடந்தால், மத்திய அரசு ஊழியர்களின் தற்போதுள்ள 17% DA 25 சதவீதமாக உயரும்.
இது தொடர்பாக மத்திய அரசு இன்னும் எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடவில்லை என்பதை மீண்டும் கவனத்தில் கொள்க.
7 வது ஊதியக் குழு சம்பள உயர்வு, நிலுவைத் தொகை
DA நிலுவைத் தொகை சேர்த்து அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தில் நல்ல உயர்வு இருக்கும். ஏனெனில் அவர்களின் தற்போதைய DA 8 சதவிகிதம் அதிகரிக்கும். அவர்களின் பயண கொடுப்பனவு (TA) அதே சதவீத புள்ளிகளுடன் உயரும்.
அரியர் தொகையும் கிடைக்கும் என எதிர்பார்ப்பு
DA மற்றும் DR சலுகைகள் ஜூலை 2020 முதல் முடக்கி வைக்கப்பட்டிருப்பதால், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் DA-க்கு பிந்தைய அரியர் தொகையை எதிர்பார்க்கிறார்கள்.
7 வது ஊதியக்குழு அகவிலை நிவாரணம்
சுமார் 58 லட்சம் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் DR உடன் DA நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. DA நிலுவைத் தொகை சேர்த்து கொடுக்கப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் மாத ஓய்வூதியமும் அதிகரிக்கும்.
ALSO READ: 7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு நிவாரணம் அளிக்கும் செய்தி வெளியீடு!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR