Latest 7th Pay Commission update on DA, HRA, TA allowances: புதிய ஊதியச் சட்டம் 2021 (New Wage Act 2021) அமல்படுத்தப்பட்ட பின்னர் தங்கள் சம்பளத்தில் என்ன மாற்றங்காள் ஏற்படும் என்பது பற்றிய குழப்பம் இன்னும் மத்திய அரசு ஊழியர்களின் மனதில் உள்ளது. இது குறித்து தற்போது வர்த்தக நிபுணர்கள் சில தகவல்களை அளித்துள்ளனர். இதன் மூலம் ஊழியர்களுக்கு தெளிவு பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
புதிய ஊதியக் குறியீடு செயல்படுத்தப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தில் சில மாற்றங்கள் வரும் என்பது உண்மைதான். இருப்பினும் இது அமல்படுத்தப்பட்ட பிறகு பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
ஏப்ரல் 1 முதல் புதிய ஊதியக் குறியீட்டை மத்திய அரசு அறிமுகப்படுத்தக்கூடும்.
ஏப்ரல் 1 முதல் புதிய ஊதியக் குறியீட்டை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த புதிய ஊதியச் சட்டம் 2021-ல் அமல்படுத்தப்பட்டவுடன், ஒரு ஊழியரின் அடிப்படை குறைந்தபட்ச சம்பளம் நிகர சி.டி.சியில் குறைந்தது 50 சதவீதத்துடன் ஒத்திருக்கும்.
ஊழியர்களின் கொடுப்பனவு நிகர சி.டி.சியின் 50 சதவீதத்தைத் தாண்டி செல்ல முடியாது
புதிய ஊதியக் குறியீடு அமல்படுத்தப்பட்டால், ஒரு நபரின் கொடுப்பனவு நிகர சி.டி.சியில் 50 சதவீதத்தத் தாண்டி செல்ல முடியாது. இதனால் ஊழியர்களின் அகவிலைப்படி (DA), பயணப்படி (TA) மற்றும் வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) ஆகியவற்றிலும் மாற்றம் இருக்கும்.
ALSO READ: LIC IPO: LIC பாலிசிதாரர்களுக்கு பெரிய ஜாக்பாட்: எப்போது வெளிவருகிறது IPO?
நிபுணர்களின் கருத்து இதுதான்
ஜீ பிசினஸுடனான உரையாடலில், செபி அங்கீகாரம் பெற்ற வரி மற்றும் முதலீட்டு நிபுணர் ஜிதேந்திர சோலங்கி, புதிய ஊதியக் குறியீடு அமல்படுத்தப்பட்டால் நிகர மாதாந்திர சி.டி.சி-யில் 50 சதவீதம் தான் கொடுப்பனவுகள் இருக்க வேண்டும் என்ற வரம்பு விதிக்கப்படும் என்று கூறினார்.
DA, TA, HRA ஆகிய கொடுப்பனவுகளில் மாற்றம் இருக்கும்.
ஒரு நபரின் மாதாந்திர கொடுப்பனவு அவரது நிகர சி.டி.சி-யில் 50 சதவீதமாக இருக்க வேண்டும் என்ற வரம்பு வந்தால் DA, TA, HRA ஆகிய கொடுப்பனவுகளில் மாற்றம் இருக்கும் என்பது தெளிவாகிறது.
புதிய ஊதியக் குறியீடு மீதான எதிர்பார்ப்ப்கள்
புதிய ஊதியக் குறியீடு கிராச்சுட்டி மற்றும் வருங்கால வைப்பு நிதியை (PF) மாற்றுமா என்பது குறித்து பல எதிர்பார்ப்புகள் உள்ளன. இது குறித்து பேசிய டிரான்ஸென்ட் கன்சல்டன்ஸின் வெல்த் மேனேஜ்மெண்ட் இயக்குநர் கார்த்திக் ஜாவேரி, மாதாந்திர அடிப்படை ஊதியம் மற்றும் DA அடிப்படையில் பி.எஃப் மற்றும் கிராஜுவிட்டி கணக்கிடப்படுவதாகவும், இதனால், புதிய ஊதியக் குறியீடு அமல்படுத்தப்படுவதால் பி.எஃப் மற்றும் கிராச்சுட்டி ஆகியவை பாதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது என்றும் கூறினார்.
எனினும், இந்த மாற்றங்களால் உழியர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாமல் இருக்கத் தேவையான அனைத்து நடவடிகைகளையும் அரசு எடுத்திருக்கும் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள்.
ALSO READ: LIC அளிக்கும் அதிரடி offer: காலம் கழிந்த பாலிசிகளை மீண்டும் துவக்க தள்ளுபடியுடன் வாய்ப்பு
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR