பீகாரின் தலைநகரான பாட்னாவில் தனியார் மருத்துவமனையில் கடந்த 14-ம் தேதி லலிதா தேவி (வயது 31) பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் முதன்மை கட்டணமாக ரூ.1.5 லட்சம் செலுத்துமாறு மருத்துவ நிர்வாகம் குடும்பத்தினரிடம் கூறியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதையடுத்து ரூ.75 ஆயிரம் செலுத்துமாறு கூறியுள்ளது. லலிதா தேவியின் கணவர்  நித்யான் ராமினால் ரூ. 25,000 மட்டுமே செலுத்த முடிந்தது. மீதி பணத்தை கட்ட சொல்லி மருத்துவமனை நிர்வாகம் வலியுறுத்தி உள்ளது. முழு பணத்தையும் செலுத்தினால் தான் லலிதா தேவி டிஸ்சார்ஜ் செய்வோம் என்று மருத்துவ நிர்வாகம் கூறிவிட்டது. இதனால், லலிதா மருத்துவமனையில் சிறைவைக்கப்பட்டார்.


இதையறிந்த லலிதாவின் 7 வயது குழந்தை தாயின் மருத்துவ செலவிற்காக தெருவில் பிச்சை எடுத்துள்ளான். இந்த சம்பவம் உள்ளூர் தொலைகாட்சியில் வெளியானது. இதனை கண்ட மதேபுரா எம்.பி.பப்பு யாதவ் இந்த பிரச்சனையில் இருந்து தாயையும் குழந்தையும் மீட்டனர். மருத்துவமனைக்கு எதிராக எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.