Fact Check: அரசுத் துறையில் 70 ஆயிரம் வேலைவாய்ப்புகள், வைரலாகும் செய்தியின் உண்மை என்ன?
நாடு முழுவதும் கலால் துறையில் 70 ஆயிரம் காலியிடங்களுக்கு மத்திய அரசு ஆட்சேர்ப்பு நடத்துவதாக அண்மையில், ஒரு செய்தி சமூக ஊடகங்களில் அதிகளவில் வைரலாகி வருகிறது... இது உண்மையா என்ற சந்தேகம் எழுந்தது... எனவே அதனை ஆய்வு செய்து பார்த்ததில் திடுக்கிடும் உண்மைகள் தெரிய வந்தது...
புதுடெல்லி: கொரோனாவின் தாக்கத்தினால், சமூக ஊடகஙக்ளில் பல்வேறு செய்திகளும் வைரலாகின்றன. அதில் வேலையின்மை மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான செய்திகள் மிகவும் முக்கியத்துவம் பெறுபவை. இந்தச் செய்திகளில் பல உண்மை, அதே சமயம் தவறான சில செய்திகளும், போலிச் செய்திகள் அவற்றுடன் கலந்து வருவதால், செய்தியின் உண்மைத் தன்மை உணராமல் பல வீபரீதங்கள் நிகழ்கின்றன.
நாடு முழுவதும் கலால் துறையில் 70 ஆயிரம் காலியிடங்களுக்கு மத்திய அரசு ஆட்சேர்ப்பு நடத்துவதாக அண்மையில், ஒரு செய்தி சமூக ஊடகங்களில் அதிகளவில் வைரலாகி வருகிறது... இது உண்மையா என்ற சந்தேகம் எழுந்தது... எனவே அதனை ஆய்வு செய்து பார்த்ததில் திடுக்கிடும் உண்மைகள் தெரிய வந்தது...
கலால் (Excise) துறையில் வருமானம் அதிகம்
அரசாங்கத்திற்கான வருமானம் வரி வடிவில் அதிக அளவில் கிடைக்கிறது. தற்போது அரசாங்கம் 50 சதவீதம் அதிகமான கடைகளுக்கு அனுமதி கொடுத்துள்ளது. இதன் காரணமாக கலால் துறைக்காக, அனைத்து மாநிலங்களிலும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலைக்கு எடுக்கப்படுவார்கள் என்று அந்த செய்தி கூறுகிறது.
இது தொடர்பாக அரசு ஒரு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, 2019 மற்றும் 2020 நிதியாண்டிற்குப் பிறகு, சில்லறை விற்பனை கடைகள் மற்றும் நாட்டு மதுபானம், வெளிநாட்டு மதுபானம், பீர் ஆகியவற்றின் மாடல் கடைகளின் புதிய பதிவுக்கான செயல்முறை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.
போலி செய்தி
வைரலாகி வரும் இந்த பதிவின் உண்மைத் தன்மையை சோதனை செய்த Press Information Bureau (PIB), இந்த செய்தி முற்றிலும் போலியானது என்று கூறியுள்ளது. கலால் துறையிலிருந்து இதுபோன்ற எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
செய்திகளை சரிபார்ப்பது...
இதுபோன்ற பல செய்திகளை வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் நாம் தினமும் பார்த்து வருகிறோம். அதன் உண்மைத்தன்மையை அறிந்துக் கொள்ள விரும்பினால், நீங்களே சரி பார்த்துக் கொள்ளலாம். சரிபார்க்க வேண்டிய செய்தியை PIB க்கு அனுப்பலாம். https://factcheck.pib.gov.in/ அல்லது +918799711259 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்புங்கள். செய்தியின் உண்மைத்தன்மையை அறிந்துக் கொள்ள மற்றுமொரு வழி, pibfactcheck@gmail.com. என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். இந்த தகவல் PIB வலைத்தளமான https://pib.gov.in இல் கிடைக்கிறது.