புதுடெல்லி: மேலும் 72 மணி நேரம் பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவிப்பு


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரூபாய் 500 மற்றும் ரூபாய் 1000  நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 8-ம் தேதி அறிவித்தார். ரூபாய் 500 மற்றும் ரூபாய் 1000 நோட்டுகளை அடுத்த மாதம் டிசம்பர் 30-ம் தேதி வரை வங்கிகளில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள், தபால் நிலையங்கள் மூலம் நேற்று ரூ.2000 புதிய நோட்டு புழக்கத்துக்கு வந்துள்ளது. இன்று மூன்றாவது நாளாக வங்கிகளுக்கு மக்கள் படையெடுத்தனர். ஒரு நாளைக்கு 4000 ரூபாய் அளவுக்கு மட்டுமே மாற்ற முடியும் என்று கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளதால் இன்றும் வங்கிகளில் கூட்டம் காணப்பட்டது. இது தவிர வங்கிகளில் நிறைய பேர் ரூ.500, ரூ.1000 பழைய நோட்டுகளை கொண்டு வந்து டெபாசிட் செய்தனர். மேலும் நேற்று முதல் ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டார்கள் என்று கூறப்பட்டிருந்தது.  


இதையடுத்து, வருகிற 14-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மேலும் 3 நாட்களுக்கு நாடு முழுவதும் டோல் பிலாஜாகளில் வசூலிப்பது நிறுத்தி வைக்கப்படும். பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தை தவிர்ப்பதற்காக இந்த நீடிப்பை செய்வதாக தெரிவித்தார்.


அதேநேரம் சமையல் எரிவாயு, அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரி, ரெயில்வே கேட்டரிங், பால் பூத்துகள், பஸ், ரெயில் போக்குவரத்து, விமான நிலையங்கள், மயானங்கள், அடக்கஸ்தலங்கள், மெட்ரோ ரெயில் டிக்கெட், பெட்ரோல் நிலையங்கள், மின்சாரம், குடிநீர், இந்திய தொல்லியல் துறையின் நுழைவு கட்டணம், கூட்டுறவு விற்பனை நிலையங்கள், கோர்ட்டு கட்டணங்கள், அபராத தொகை, வரிகள்  11-ம் தேதி வரை பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை பயன்படுத்திக் கொள்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்து இருந்தது. 


இந்த அவகாசம் நேற்றிரவு முடிந்த நிலையில் தற்போது மேலும் 72 மணி நேரம் நீடிக்கப்பட்டு உள்ளது. மேலும் 72 மணி நேரம் பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்தன.