மும்பை மற்றும் அகமதாபாத் இடையேயான புல்லட் ரயில் திட்டத்தின் 72 சதவீத ஒப்பந்தங்கள் 'ஆத்மனிர்பர் பாரத்' ('Aatmanirbhar Bharat') திட்டத்தின் கீழ் உள்நாட்டு நிறுவனங்களுக்கே கொடுக்கப்படும் என்று ரயில்வே வாரியத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான வி.கே. யாதவ் (V K Yadav) வெள்ளிக்கிழமையன்று  தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் அமைப்பது போன்ற அதிக மதிப்புள்ள தொழில்நுட்ப பணிகள் இந்திய ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்கப்படும்.  சிக்னலிங், தொலைத் தொடர்பு (signalling, telecom) மற்றும் பொருட்களை கொண்டு சேர்ப்பது போன்ற பணிகளை ஜப்பானிய நிறுவனங்கள் கையாளும் என்று அசோசம் (அசோசியேட்டட் சேம்பர்ஸ் ஆஃப் காமர்ஸ் ஆஃப் இந்தியா (Associated Chambers of Commerce of India (ASSOCHAM)) ஏற்பாடு செய்த ஒரு வெபினாரில் பேசிய வி.கே.யாதவ் தெரிவித்தார்.  


508 கி.மீ நீளமுள்ள அதிவேக ரயில்பாதை திட்டத்திற்கு ரூ 1.10 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதில், 88,000 கோடி ரூபாய் நிதியை ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம், ஜிகா (JICA) இந்தியாவுக்கு கடனாக வழங்கும்.


"ஜப்பானிய (Japan) அரசாங்கத்துடன் மிக விரிவான கலந்துரையாடலுக்குப் பிறகு, முழு ஒப்பந்த மதிப்பில் 72 சதவீதத்தை இந்திய ஒப்பந்தக்காரர்களுக்குத் கொடுக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளோம். இதில் பாலங்கள், கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை தொடர்பான ஒப்பந்தங்கள் உள்ளிட்ட அனைத்து சிவில் பொறியியல் பணிகளும் இந்திய நிறுவனங்களுக்குக் கிடைக்கும். ஜப்பானிய ஒப்பந்தக்காரர்களுக்கு, சிக்னலிங் மற்றும் தொலைத் தொடர்பு, உள்ளிட்ட மின் பணிகள் தொடர்பான ஒப்பந்தங்கள் ஒதுக்கப்ப்டும்" என்று யாதவ் கூறினார்.


"ஆத்மனிர்பர் பாரதத்தின்" இலக்கை ரயில்வே (Railway) பெரிய அளவில் அடையப் போகிறது. இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், உள்கட்டமைப்பை ஒருங்கிணைந்த முறையில் அபிவிருத்தி செய்து வருகிறது ரயில்வே. இதனால் போக்குவரத்து தேவைகளை 2050 வரை நாமே கவனித்துக் கொள்ள முடியும் ”என்று யாதவ் கூறினார்.


நிலம் கையகப்படுத்துதல் காரணமாக மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம் தாமதமாகி வருவதாக அவர் தெரிவித்தார். குஜராத்தில் இதுவரை 90 சதவீத நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது, மீதமுள்ள 10 சதவீதம் டிசம்பர் 31 க்குள் கையகப்படுத்தப்படும் என்று யாதவ் கூறினார்.


வெபினாரில் கலந்துக் கொண்ட அவர்,  தேசிய ரயில் திட்டம் 2030-இன் (national rail plan 2030)  இறுதி வரைவு தயாராக உள்ளது என்றும் அது அடுத்த மாதம் வெளியிடப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறினார்.


ALSO READ | ட்ரம்ப் விதிக்கும் புதிய நிபந்தனை... ஜோ பைடனுக்கு சிக்கல் நீடிக்கிறதா.. !!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR